கேரள கோவில்களின் பெருமைகள்

கேரள கோவில்களில் தரிசனம் செய்ய பலர் விரும்புவதின் காரணங்கள்…

அங்கே சிவா, விஷ்ணு பேதங்கள் இல்லை

சைவம், வைணவம்… அதிலும் வடகலை, தென்கலை இல்லை..  ஏன் திருநீறே இல்லை …மஹா தேவர் என்றழைக்கப்படும் சிவ சன்னிதானங்களில்கூட !! சந்தனம் மட்டுமே பிரசாதம்.  ஒரே கோவிலில் சிவலிங்கம், மஹாவிஷ்ணு, பகவதி, சர்ப்பக்காவுகள் தரிசனம் செய்யலாம்..( பழைமையான கோவில்களிலேயே..!)

தெருவுக்கு ஒரு புதிய கோவில் , அதற்கு ஒரு தர்மகர்த்தா குழு என்றெல்லாம் இல்லை..!  கோவிலுக்குள் சாதி சண்டைகள், முதல் மரியாதை, பரிவட்டம் கட்டுதல் இல்லை…  எந்த கோவிலிலும் கட்டண தரிசனம், விரைவு தரிசனம், “இலவச” தரிசனம் கிடையாது…!   தந்திரிகள் கருவறை பூஜையில் உள்ளோர், இயற்கை உபாதையை கழிக்க வேண்டியிருந்தால்.. மீண்டும் மீண்டும் குளித்தபின்பே கருவறைக்குள் செல்கிறார்கள்( குருவாயூரில் கண்டது )…

புஷ்பாஞ்சலி( அர்ச்சணை) அவ்வப்போது பெயர், நட்சத்திரம் சொல்லி “சக குடும்பானாம்..” என்று சப்தமாக சொல்லி , நிமிடத்திற்கு ஒரு ஆரத்தி காண்பித்து தட்டுக்காசு வாங்குவதில்லை…  மந்திரங்களை மனதுக்குள் உச்சரித்து, முத்திரைகளுடன் புஷ்பாஞ்சலி மொத்தமாக நடக்கும்…

கோவில் பிரசாதம் என்று மெதுவடை, புளியோதரை, அதிரசம் என்று கோவிலுக்குள் மினி ஹோட்டல் கிடையாது.  கோவில் பிரகாரத்திற்குள், ஏன் வளாகத்திற்குள்ளேயே யாரும் உணவருந்துவதில்லை ..  கோவில் வளாகத்திற்குள் அன்னதானக்கூடங்கள் இல்லை…

நரேந்திர மோதி வந்தாலும் வேட்டி, மேல் வஸ்திரத்துடன் மட்டுமே அனுமதி…(பத்மநாபசுவாமி ஆலயம்)  இந்திரா காந்தியே வந்தாலும் இந்து அல்லாதவர்க்கு அனுமதி இல்லை ( குருவாயூர் ஶ்ரீ கிருஷ்ணன் கோவில்)

கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும், கிருஸ்துவர்கள் அதிகம் இருக்கும் மாநிலமான கேரளத்தில் தெய்வ பக்தி அதிகமாகவே உள்ளது..  அங்கே கோவிலை இடிப்பவர்கள் இல்லை.. கடவுளை இல்லை என்று சொல்பவர்களும் இல்லை!!

கோவிலின் பாரம்பரியத்தை கெடுக்கவும் இல்லை!! கோவில் உள்ளே செல்வதற்கு முன் ஆண்கள் சட்டையை கழட்டிவிட்டுதான் செல்ல வேண்டும்!!  இதற்கு அங்கு உள்ள எந்த அரசியல்வாதியும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை!!

பெண்கள் சில கோவிலுக்குள் செல்லக்கூடாது என்ற கட்டுபாட்டை பெண்களே மதிக்கிறார்கள்..  எவ்வளவு பெரிய பணக்காரணாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும்.. வரிசையில்தான் வரவேண்டும்..!! சிறப்பு தரிஸணம் கட்டணம் ஏதும் கிடையாது.. ஏன்?பொதுவாகவே கட்டணமே கிடையாது!!

அர்ச்சகர்களை தொட்டு பேசமுடியாது!!  அவர்கள் இரண்டு வேளையும் குளித்துவிட்டுதான் கருவறைக்குள் செல்வார்கள்.. பூஜை முடியும் வரை யாருக்காகவும், எதுக்காகவும் பூஜையை பாதியில் நிறுத்துவதில்லை!! அரைத்த சந்தனம்தான் சாற்றுவார்கள்.  அந்த பிரஸாதத்தை அவர்களிடம் பெற வேண்டுமானால் தக்ஷிணை கொடுத்தால் மட்டுமே தருவார்கள்.

(ஏன் என்றால் சந்தனம் அரைப்பது அவ்வளவு சிரமம்! அதனாலேயே பணம் வாங்குகிறார்கள் இதில் தவறில்லை) ஆனால் இவ்வளவு பணம்தான் தரனும் என்கிற கட்டுபாடு இல்லை!!!   பக்தர்கள் யாரும் அவர்கள் இஷ்டத்திற்கு கோவிலை சுற்றி எங்குமே  விளக்கு ஏற்ற முடியாது.. கோவிலில் எரியும் பொதுவான விளக்கிலேயே கொண்டுவந்த எண்ணையை விட்டுவிடவேண்டும்..

அதிகாலை நிர்மால்ய தரிஸணம் உண்டு!! பூஜைநேரத்திற்கு பூஜை செய்துவிடுவார்கள்.. யாருக்காகவும் பூஜை நிற்காது..  பூஜைக்கு கட்டணம் செலுத்தியவர்கள் கோவில் நிர்வாகம் சொல்லும் நேரத்திற்கு வந்துவிட வேண்டும்.. இல்லையேல் அவர்களுக்கக காத்திருந்து பூஜை செய்ய மாட்டார்கள்!!

கோவில் பிரஸாதத்தை விற்பது இல்லை!! கோவிலின் பிரதான கோபுரத்துக்கு வெளியேதான் கடைகளுக்கு அனுமதி!! வெளியிலிருந்து கொண்டுவரும் பூக்களையோ,மாலைகளைகளையோ, பிரஸாதங்களையோ, கருவறைக்குள் அனுமதிப்பல்லை!!

அர்ச்சர்கள் கோவிலை விட்டு வேறு எங்கும், யார் வீட்டுக்கும் பூஜைக்கு கோவில் நேரத்தில் செல்வதில்லை!!

கோவில் சாற்றும்வரை சன்னதியிலேயே அர்ச்சர்கள் இருப்பார்கள்!!

கோவிலை சுற்றி சுத்தமாக வைத்திருப்பார்கள்!!..

மொத்தத்தில் கோவில் பணத்திற்காக அல்ல. கேரளத்து பாரம்பர்யத்திற்காக!