பெங்களுரு:
ர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு நாட்கள் பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கர்நாடகா அரசு அமைப்பதில் இருந்த முட்டுக்கட்டையை காங்கிரஸ் வியாழக்கிழமை முடிவுக்கு கொண்டு வந்து, சித்தராமையா முதலமைச்சராகவும், டிகே சிவகுமாரை துணை முதல்வராகவும் நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்த்தபடியே சித்தராமையா முதல்வராக பதவியேற்பார். சிவக்குமார் சில முக்கிய இலாகாக்களுடன் ஒரே துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக சிவக்குமார் நீடிப்பார்.

இரண்டரை ஆண்டு காலப் பகிர்வுக்கு கட்சித் தலைமை ஒப்புக்கொண்டுள்ளதாக சிவக்குமார் முகாம் கூறியுள்ள நிலையில், தலைமை அதை பகிரங்கமாக அறிவிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருவரும் மே 20ம் தேதி பதவியேற்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில் இன்று இரவு மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் முதல்வர் குறித்து அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.