டிம்பிள் யாதவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய ஷிவ்பால் யாதவ்

Must read

லக்னோ: ஷிவ்பால் யாதவ் நடத்தும் பி.எஸ்.பி (எல்) கட்சி, வரும் நாடாளுமன்ற தேர்தலில், அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

ஒருகாலத்தில் சமாஜ்வாடி கட்சியின் சக்திவாய்ந்த தலைவராக இருந்தவர் ஷிவ்பால் யாதவ். பின்னர், கட்சிக்குள் நடந்த அதிகாரப் போட்டியால் தனிக்கட்சித் தொடங்கினார்.

தற்போதைய நாடாளுமன்ற தேர்தலுக்கு தனது கட்சி சார்பில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவற்றில், அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடும் கன்னோஜ் தொகுதியும் ஒன்று.

இத்தொகுதியில், பி.எஸ்.பி (எல்) கட்சியின் சார்பில், சுனில்குமார் சிங் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். அதேசமயம், அகிலேஷ் யாதவ் போட்டியிடும் ஆஸம்கர் தொகுதிக்கு, பி.எஸ்.பி (எல்) சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

ஷிவ்பால் யாதவ், உத்திரப்பிரதேசத்தின் ஃபிரோஸாபாத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.

– மதுரை மாயாண்டி

More articles

Latest article