நெல்லை: 
திருநெல்வேலி மாவட்டம் வாசு தேவநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யம் பகுதிகளில் வேளாண்மை மற்றும் குடிநீருக்கு ஆதாரமான செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தி, சங்கரன்கோவிலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் ஓ.ஏ.நாராய ணசாமி தலைமை வகித்த இந்த போராட்டத்தில்  மாநிலங்களவை உறுப்பினர் தங்கவேல், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் மணிகண்டன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.வி.கிரி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “செண்பகவல்லி தடுப்பணை பிரச்சினை, இப்பகுதி மக்களின் ஜீவாதாரப் பிரச்சினை.  ஆனால் தமிழக, கேரள அரசுகள் இதில் அக்கறை செலுத்தவில்லை.
ஏற்கெனவே உள்ள அந்த அணையில் 30 அடி வரை மட்டுமே உடைந்துள்ளது. அதை மட்டும் கட்டினாலே போதும்.  கடந்த 45 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை நிறைவேற்ற இப்பகுதி மக்களும் விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.  ஆனால் ஆட்சியாளர்கள், இக் கோரிக்கையை செவிமெடுக்கவே இல்லை.
இந்த அணை உடைப்பு சீரமைக்கப்பட்டால் வாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள், சிவகிரி பகுதியில் 33 குளங்கள் வழியாகவும், சங்கரன்கோயில் வட்டத்தில் நேரடி பாசனத்தின் வழியாகவும் ஏறத்தாழ 11 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும்” என்று கே.எஸ். ராதாகிருஷ்ணன் பேசினார்.
சுப உதயகுமார் பேசும்போது, “`செண்பகவல்லி தடுப்பணையில் ஏற்படுத்தப்பட்ட உடைப்பை சரிசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும், கேரள அரசு அதை நிறைவேற்ற முன்வரவில்லை. தமிழகத்தின் நீராதாரங்களை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று சுப. உதயகுமார் பேசினார்.
செண்பகவல்லி அணை உடைப்பு பற்றி கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதியிருக்கும் விரிவான கட்டுரைக்கு..
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2016/05/blog-post_59.html