ரஜினியின் ஆஷ்ரம் பள்ளி மூடப்படும் அபாயம்

Must read

சென்னை:
சென்னையில் உள்ள நடிகர் ரஜினியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, ‘தி ஆஷ்ரம்’ பள்ளிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காததால் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தின்  ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில், ‘தி ஆஷ்ரம்’ பள்ளி, சென்னை, கிண்டியில் செயல்பட்டு வருகிறது.  இதில் உள்ள, மெட்ரிக் பள்ளி, கடந்த நான்கு ஆண்டுகளாக அனுமதியின்றி நடைபெற்று வருகிறது.
பள்ளி இயங்கும்  இடத்தின் உரிமையாளரான வெங்கடேஸ்வரலு என்பவர், பள்ளிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.  அவரது மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
rama
இதையடுத்து, தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் ஸ்ரீதேவி, கடந்த ஜனவரி, 27ல் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலர் லதா ரஜினிகாந்த், நிர்வாக அறங்காவலர் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பள்ளி முதல்வர் வந்தனா ஆகியோர் நேரில் ஆஜராக  சம்மன் அனுப்பினார்.
இந்த சம்மனை ரத்து செய்ய கோரி, பள்ளி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தடையை விலக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த நிலையில், ஆஷ்ரம் பள்ளி சார்பில், பள்ளிக் கல்வித் துறைக்கு இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதால், பள்ளி அங்கீகாரத்தை அதிகாரிகள் நிறுத்தி வைத்து உள்ளனர்.
“அதிகாரிகளின் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு பள்ளி நிர்வாகம் உரிய ஒத்துழைப்பு அளிக்காவிட்டால்  பள்ளியின் மீது எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆபத்து உள்ளது” என்று கல்வித்துறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தவிர இட உரிமையாளுடன் வாடகை பிரச்சினையும் இருப்பதாக கூறப்படுகிறது.
 

More articles

1 COMMENT

Latest article