கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 1996 ம் ஆண்டு வெளியான படம் இந்தியன்.

சுகன்யா, மனீஷா கொய்ராலா, கஸ்தூரி, ஊர்மிளா மதோங்கர் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப் படத்தில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

 

மாபெரும் வெற்றி படமான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு 2017 செப்டம்பர் மாதம் வெளியானது.

2019 ஜனவரி மாதம் போட்டோ ஷூட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் 2020 பிப்ரவரி மாதம் படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்தை தொடர்ந்து நிறுத்தப்பட்டது.

கொரோனாவுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்க இருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்துடன் இயக்குனர் ஷங்கருக்கு ஏற்பட்ட மோதலை அடுத்து மீண்டும் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று மீண்டும் துவங்கியுள்ளது.