ரொம்ப மோசமானதுங்க.. உஷாரா இருங்க.. தனிமையில் சென்றாயன்….!

Must read

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய இந்தியாவில் சுமார் 4 லட்சம் நபர்களும், தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

இந்நிலையில் நடிகர் சென்றாயனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஆவி பிடித்த பின்பு பேசிய சென்றாயன், “வணக்கம் மக்களே. நான் நடிக்கல. உண்மையாவே ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன். வாழ்க்கையில ஜெயிக்கணும், சினிமாவுல ஜெயிக்கணும் என எப்பவுமே வாழ்க்கையை பாசிடிவாகவே பார்ப்பவன் நான். ஆனா எனக்கே கொரோனா பாசிடிவ்னு வந்துடுச்சு.. ஆரம்பத்துல கொரோனா குருமா என கவனக்குறைவாக இருந்த எனக்கே இப்போது கொரோனா தாக்கியுள்ளது. என் வீட்டில் நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். மனைவி, குழந்தைகள் வேறு அறையில் உள்ளனர்.

மனைவி மட்டும் அவ்வப்போது உணவு கொடுக்க வருவார். அதனால் கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ.. மக்களே கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

More articles

Latest article