“‘கோ’ படத்தில் சிம்புவா?” இணையத்தை தெறிக்கவிடும் ஸ்டில்ஸ்….!

Must read

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல் அமீர், கார்த்திகா மற்றும் பலர் நடித்து 2013 ஆம் வருடம் வெளியான திரைப்படம் கோ.

இளைஞர்கள் அரசியலுக்கு வருவது குறித்த இந்த படம் ஏகப்பட்ட திருப்பங்கள் நிறைந்த சுவாரசியமான திரைப்படமாக வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்கிய இயக்குநர் கே.வி.ஆனந்த், அண்மையில் மரணம் அடைந்தார்.

கே.வி.ஆனந்த் மறைவு குறித்து பலரும் இரங்கல்களை தெரிவித்து வந்தனர். அந்த நேரத்தில் நடிகர் சிம்பு, கோ திரைப்படத்தில் தான் நடிக்க வேண்டியிருந்தது, ஆனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது ‘கோ’ திரைப்படத்தில் சிலம்பரசன் நடித்த யாரும் பார்த்திராத சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது .

More articles

Latest article