சன் டிவி ‘மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ்’ சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி….!

Must read

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார் விஜய் சேதுபதி. ‘மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ்’ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி தயாராகியுள்ளது.

வெளிநாட்டில் மிகவும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சியின் தமிழ் ஆக்கமான இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது சன் டிவி.

More articles

Latest article