சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….!

Must read

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

நீண்ட மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘டாக்டர்’ படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

முதலில் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம் பின்னர் ரம்ஜானுக்கு தள்ளிப்போனது. தற்போது நிலவி வரும் கொரோனா சூழலில் படம் வெளியாக வாய்ப்பில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

அதன் அடிப்படையில் KJR ஸ்டுடியோஸ் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளனர். நாட்டில் இதுபோன்ற நிலையில் பட ரிலீஸை பற்றி யோசிக்கும் தருவாயில் நாம் இல்லை எனவே அனைவரும் பத்திரமாக இருங்கள் விரைவில் நிலைமை சரி ஆனதும் டாக்டர் அப்டேட் வரும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டாக்டர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article