சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. சென்னையில் உள்ள பள்ளி கல்வி வளாகமான பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள்  உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது  17 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது.

திமுகஅரசு  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வப்போது சென்னையில் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 6ந்தேதி  சம வேலைக்கு சம ஊதியம் என்ற  கோரிக்கை அட்டை அணிந்து  பணிக்குச் சென்றனர். இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள  டிபிஐ வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் தற்போது உண்ணாவிரத போராட்டமாக மாறி உள்ளது.  சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி நேற்று (செப் 28ந்தி) முதல் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில்,  இரவில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை  ஆசிரியர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

இதனால், உண்ணாவிரதப் போராட்டக்களத்தில் பல ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர். இதனால் சக ஆசிரியர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, மயங்கி விழுந்த  17 ஆசிரியர்கள்  மீட்கப்பட்டு  ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், உண்ணா விரதத்தை கைவிட மறுத்து வரும் ஆசிரியர்கள்,  கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கைpயல், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில், 01.06.2009-க்குப் பிறகு பணியில் சோ்ந்த சுமாா் 14,000 முதுநிலை ஆசிரியா்கள் ஊதிய முரண்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக 01.06.2009-க்கு முன்னா் பணியில் சோ்ந்த முதுநிலை ஆசிரியா்களை விட 01.06. 2009-க்கு பிறகு பணியில் சோ்ந்த முதுநிலை ஆசிரியா்கள் நிகழாண்டில் ஒவ்வொரு மாதத்திலும் ஏறக்குறைய ரூ. 14,000 குறைவாக ஊதியம் பெறுகின்றனா். ஏற்கெனவே, முதல்வா், அமைச்சா் கவனத்துக்கு இந்தப் பிரச்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அது தொடா்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு முதுநிலை ஆசிரியா்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 1978-இல் முதுநிலை ஆசிரியா்களின் ஊதியத்துக்கும், கல்லூரி விரிவுரையாளா்களின் ஊதியதுக்குமான வித்தியாசம் 3.7 சதவீதம். தற்போது 53.2 சதவீதத்தைக் கடந்து உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் முதுநிலை ஆசிரியா்கள், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியா்களைவிட குறைவான ஊதியமே பெறுகின்றனா். தமிழக பள்ளிக் கல்வித் துறை இது சாா்ந்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது,  கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதிக்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் ரூ.5,200 என்னும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, 13 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது.

பணி, கல்வித்தகுதி என அனைத்தும் ஒரே விதமாக இருந்தபோதும் ஒரே ஊதியம் வழங்கப்படுவதில்லை. எனவே, சம வேலைக்கு சம ஊதியம் என்னும் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு அமைக்கப்பட்ட 3 நபர் குழுவின் அறிக்கையை அரசுக்கு விரைந்து வழங்க வலியுறுத்தி, நடத்தப்பட்ட எங்களது செயற்குழு கூட்டத்தில் 3 தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

முதல் தீர்மானத்தின்படி, ஆக.13-ம் தேதி வெற்றிகரமாக சென்னையில் மாநாடு நடத்தப்பட்டது. இரண்டாம் தீர்மானத்தின்படி, ஆசிரியர் தினத்தன்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்குச் சென்றனர்.  இதன் பின்னரும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் செப்.28-ம் தேதி முதல் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியிருந்தார்.

மேலும்,  திமுக அரசு கூறியபடி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்மதை தோல்வி…