சென்னை:  ஏழ்மை நிலையில் உள்ள (வறிய நிலை) 10 கலைமாமணி விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கிழியாக ரூ.1 லட்சம் வழங்கினார். மேலும்,  கிராமிய கலைஞர்களுக்கு இசைக் கருவி, ஆடை அணிகலன்கள் வாங்க நிதியுதவி வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில்,   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு ரூ.1 இலட்சம் பொற்கிழி – தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 500 கலைஞர்களுக்கு இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட ரூ.50 இலட்சம் நிதியுதவி – நலிந்த நிலையில் வாழும் 1000 மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000/- நிதியுதவி வழங்கினார்.