எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நெடுஞ்சாலை பணிகளுக்கான ரூ.4800 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை தனது உறவினர்களுக்கு முறைகேடாக வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஆர்.எஸ். பாரதி 2018 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை திங்களன்று நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

அ.இ.அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரத்தை முடிவு செய்ய பொதுக்குழு கூட இருக்கும் அதே நாளில் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணைக்கு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.