டில்லி,

பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்பு கணக்குக்கான குறைந்த பட்ச வைப்பு தொகையை குறைத்து மாற்றி அறிவித்து உள்ளது.

உலக சேமிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவிகளிடையே சேமிப்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில சேமிப்பு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டிருந்தன.

பல்வேறு மாநிலங்களில் இவ்வாறு தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்குகள் அனைத்திலும், வங்கிகளின் குறைந்த பட்ச வைப்புத்தொகை அதிகரிப்பதால் கடும் நெருக்கடிக்கு ஆளாகின.

மாணவர்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை வங்கி நிர்வாகம் தானாகவே பிடித்தம் செய்துகொண்டனர்.

 

வங்கிகளின் இந்த பிடித்தம் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, மாணவர்களின் சேமிப்புகணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை திரும்ப ஒப்படைந்த வங்கி நிர்வாகம், தற்போது சேமிப்பு கணக்கில் வைக்கப்படும் குறைந்த பட்ச தொகையை மாற்றி அமைத்துள்ளது.

இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

மாதாந்திர சராசரி இருப்புத் தொகை பராமரிப்பைப் பொறுத்தவரையில், மாநகரங்கள் மற்றும் நகரங்கள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பராமரிக்கப்பட வேண்டிய மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ.3,000-ஆக நிர்ணயிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர்ப் பகுதி வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்சமாக ரூ.5,000 மாதாந்திர சராசரி இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ. அறிவித்திருந்தது.

இந்த தொகை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அடிப்படை சேமிப்புக் கணக்குகள் (Basic Savings Bank Deposit Accounts), பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுபவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது.

மோடி அறிவித்த பண மதிப்பிழப்பை தொடர்ந்து வங்கிகள் கொண்டுவந்துள்ள கடுமையான கட்டுப்பாடு களாலும், சேமிப்பு கணக்கில் சேமிக்கப்பட்ட  குறைந்த பட்ச தொகையின் அளவை கூட்டியது குறிப்பிடத்தக்கது.