‘பலாத்கார சாமியார்’ குர்மீத் ராம் மகளுக்கு பிடிவாரண்டு!

Must read

சண்டிகர்,

லாத்கார சாமியார் குர்மீத் ராம் மகள் என்று கூறப்பட்டு வந்த ஹனிப்ரித்-க்கு அரியானா காவல்துறை பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது.

தனது பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம்  செய்து வந்ததாக, முன்னாள் பெண் சீடர் ஒருவர் குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாமியாருக்கு பக்கபலமாக இருந்து வந்தவர் ஹனிப்ரித் இன்சான் என்ற இளம்பெண்.

சாமியார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் திடீரென தலைமறைவானார். இதையடுத்து சாமியாரின் தேரா சச்சா ஆசிரமத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில சாமியாரின் வளர்ப்பு மகள் என்று சொல்லப்பட்ட ஹனிப்ரித்-க்கு விசாரணைக்கு ஆஜராக அரியானா மாநில காவல்துறை பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில்,  ஹனிப்ரித், குர்மீத் ராமின் வளர்ப்பு மகள் இல்லை என்றும், அவருக்கும் சாமியா ருக்கும் செக்ஸ் ரீதியிலான தொடர்பு இருந்தது, சாமியாருடன் எனது மனைவி ஒரே படுக்கையில் இருந்தை தான் பார்த்தேன் என்றும்,   பொதுமக்களையும், தனது சீடர்களையும் ஏமாற்றவே அவர்கள் தந்தை மகள் என்று நாடகமாடி வந்தனர் என்று  என்று ஹனிப்ரித்தின் முன்னாள் கணவர் விஸ்வாஸ் குப்தா பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

இந்தநிலையில், ஹனிப்ரீத்துக்கு அரியானா மாநில காவல்துறை பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அவரை கைது செய்ய நாடு முழுவதும் போலீசார் விசாரணைணை முடுக்கி விட்டுள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article