ஸ்ரீகாந்த் நடிப்பில் செலிப்ரைட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘சத்தமின்றி முத்தம் தா’.

ராஜ்தேவ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா, ஹரீஷ் பேரடி, நிஹாரிகா, வியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜூபின் இசையில் ஆண்ட்ரியா பாடிய “செம்பரம்பாக்கம் ஏரி அளவு” என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடலை இசையமைப்பாளர் இமான் இன்று வெளியிட்டார்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை விஜய்சேதுபதி சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.