தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்திற்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பில் உருவாக உள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ராஜ்கிரண், ரேவதி நடிப்பில் வெளிவந்த ‘பா. பாண்டி’ என்ற படத்தை இயக்கிய தனுஷ் அடுத்ததாக சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் படம் இயக்கி வருகிறார்.

தற்போது மூன்றாவதாக இயக்க உள்ள படத்திற்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ #NEEK என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி வரும் நிலையில் அடுத்ததாக படம் இயக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறார்.