ஒரு பெண்ணிற்கு யார் எதிரி?: சத்குரு ஜகி வாசுதேவ்

மகளிர் தின சிறப்பு கட்டுரை: 

ண் எல்லாத் துறையிலும், தான் மேம்பட்டவன் என்று நிரூபித்து வருகிறான். எனவே அவனைப் போலவே நடந்து கொள்ளலாம் என்று ஒரு பெண் நினைக்கலாம் அல்லவா? “ என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

ஆனால்..  அதுவல்ல நோக்கம். இந்த உயர்வு, தாழ்வு என்கிற கேள்வியே வித்தியாசம் பார்க்கிற மனதில்தான் ஆரம்பமாகிறது. இந்த இருவேறு தன்மைகளில் எது உயர்ந்தது, தாழ்ந்தது என்பதல்ல. ஒரு பெண் பிறந்த நாளிலேயிருந்து, அவள் எதையும் எதிர்கொண்டு போராடாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டே வருகிறோம்.

அந்த அடிமைக் குணம் ஒவ்வொரு செயலிலும் அரும்பி விடுவதை உறுதிசெய்து கொள்கிறோம். இது என் கண் முன் நடக்கிறபோதெல்லாம், மனம் கொதிக்கிறது. எந்தப் பெண் வழியாகப் பிறந்தீர்களோ, அந்தப் பெண்ணை தாழ்ந்தவளாகக் கருதினால், அங்கிருந்து பிறந்த நீங்கள் எப்படி உயர்ந்தவர்களாக இருக்கமுடியும்? அதற்கான வாய்ப்பேயில்லை.

எனவே இந்த சிக்கல் ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையிலே இல்லை. இது உலகளாவிய சிக்கல். எங்கோ அறியாமையில் இருக்கும் ஒருவன் பெண்ணைப் பற்றி இப்படி யோசிக்கிறான் என்று நினைத்து விடாதீர்கள். இதை உங்கள் வாழ்க்கை முறையாகவே ஆக்கிவிட்டீர்கள். உங்கள் வீட்டிலும், சமூகத்திலும் கூட இப்படித்தான் நடக்கிறது. பெண்ணைத் தாழ்வாகக் கருதுவது உங்கள் பண்பாட்டின் ஒரு பகுதியாக ஆக்கிவிட்டீர்கள். இது உங்கள் ஆன்மாவையும் பாதிக்கும் அளவுக்குப் போயிருப்பதாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்கள். காலங்காலமாக எல்லோருக்குள்ளும் இது பதிந்திருப்பதால், இது குறித்து மக்கள் உடனடியாக, ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.

 

ஒருமுறை விவேகானந்தரிடம் ஒரு சமூக சேவகர் வந்து, “நீங்கள் பெண்களை ஆதரிக்கிறீர்கள் என்பது மிக நல்ல விஷயம். நான் என்ன செய்யட்டும்? நானும் சமூக சீர்திருத்தங்கள் செய்து பெண்களுக்கு உதவ விரும்புகிறேன்” என்று கேட்டபோது, “முதலில் நீங்கள் விலகுங்கள். அவர்களுக்கு நீங்கள் எதையும் செய்ய வேண்டாம். அவர்களைத் தனியாக விடுங்கள். அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை அவர்களே செய்து கொள்வார்கள்” என்று விவேகானந்தர் சொன்னார். அதுதான் தேவை. ஒரு ஆண் ஒரு பெண்ணை சீர்திருத்த வேண்டும் என்று அவசியமில்லை. வாய்ப்புக் கொடுத்தால் அவள் தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்வாள். இப்போதே மிகவும் பக்குவப்பட்டவர்களாகத்தான் பெண்கள் இருக்கிறார்கள்.

கேள்வி:  தங்களுடைய இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு பெண்களே தான் காரணமா?

சத்குரு: பெண்கள் தங்களுக்குத் தாங்களே பெரிய எதிரி என்பது துரதிர்ஷ்டமான விஷயம் தான். ஆனால் அது தான் உண்மை. மென்மையான தருணங்களில், அன்பு மயமான தருணங்களில், ஆண் தன்னுடைய ஆதிக்கத்தை உடைத்துவிட்டு பெண்ணுக்கு சுதந்திரம் தருகிறான். ஆனால் அவள், அந்த சுதந்திரம் மற்றொரு பெண்ணுக்கு நிகழாமல் பார்த்துக் கொள்கிறாள். சின்னச் சின்ன விஷயங்களில் நிறைவடையும் விதமாக அவள் ஒடுக்கப்பட்டு இருக்கிறாள். நம் கலாச்சாரமும் அதற்கு துணை போகிறது.

யாக்ஞவல்கியரிடம் மைத்ரேயி கேட்டது போல் பெரும்பாலான பெண்கள் கேள்வி கேட்பதில்லை. ஆண் தன் வாழ்வில் பெரிய பெரிய விஷயங்களைத் தேடிச் செல்கிறபோது, அவள் சிறிய விஷயங்களையே நாடிச் செல்கிறாள். எனவே ஆண், பெண்ணை தாழ்ந்தவளாகத்தான் கருதுகிறான். பெண்ணினுடைய ஆசை சிறிய அளவிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. அவள் வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் இருக்கிறது. பெண் தன்னை இப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறாள். ஆண் அதற்குத் துணை போகிறான்.

Tags: satguru-jaggi-vasudev-who-is-enemy-for-a-woman