இன்று குரு பெயர்ச்சி. இன்றைய தினம் முற்பகல் 11மணி அளவில் குருபகவன் மிதுன ராசியிலிருந்து உச்ச ராசியான கடகத்திற்கு பெயர்ந்தார்‘. இதனால் ராசிகளுக்கு கிடைக்கப்போகும் பலன் என்ன என்பது குறித்து சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.
வேத ஜோதிடத்தில் குரு பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். மிதுன ராசியில் பயணித்து வரும் அவர், இன்று இடம் பெயர்ந்து தனது ராசியை மாற்றி இருக்கிறார். பாரபவ வருடத்தின், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 26-05-2026 ஆம் ஆண்டு அன்று (இன்று) பகல் 11 மணிக்கு அவர் மிதுன ராசியிலிருந்து உச்ச ராசியான கடகத்திற்கு பெயர்ச்சியானார்.

குரு பகவான் பராபவ வருஷம் வைகாசி மாதம் 12ஆம் தேதி ( 26- 5- 2026) செவ்வாய்க்கிழமை நாழிகை 12- 49 பகல் 11 -மணிக்கு ,புனர்பூசம் நட்சத்திரம் 3-ம் பாதம் மிதுன இராசியில் இருந்து புனர்பூச நட்சத்திரம் 4-ம் பாதம் குரு பகவான் கடக இராசியில் பிரவேசித்துள்ளார்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 குருவின் இந்த மாற்றம் நடக்க இருக்கிறது. அவரது விசேஷ பார்வைகளான 5, 7, 9 ஆம் பார்வைகள் முறையே விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் விழ உள்ளது. இதன் காரணமாக அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
குருபெயர்ச்சியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

குரு பெயர்ச்சியால் அதிக பலன் பெறும் இராசிகள்
மிதுனம், கன்னி, விருச்சிகம் மற்றும் மீனம்
பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய இராசிகள்
மேஷம் | சிம்மம் | தனுசு | கும்பம் |
அர்ச்சனை செய்து கொள்ள வேண்டிய இராசிகள்
.
ரிஷபம் | கடகம் | துலாம் | மகரம் |
12 இராசிகளுக்கான குருபெயர்ச்சி பலன்கள் (2026 )
மேஷம்
4-ம் இடம் சுகஸ்தானம் சுகபோகங்கள் கூடும், புதிய வாகனம்/வீடு வாங்கும் யோகம் உண்டு.
ரிஷபம்
3-ம் இடம் முன்னேற்ற ஸ்தானம் தைரியம் கூடும், இளைய சகோதரர்களால் நன்மை உண்டாகும்.
மிதுனம்
2-ம் இடம் தன ஸ்தானம் குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும்.
கடகம்
1-ம் இடம் (ஜென்ம குரு) ஆரோக்கியத்தில் கவனம் தேவை, கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும்.
சிம்மம்
12-ம் இடம் விரைய ஸ்தானம் சுபச் செலவுகள் அதிகரிக்கும், ஆன்மீகப் பயணங்கள் கைகூடும். |
கன்னி
11-ம் இடம் லாப ஸ்தானம் |எடுத்த காரியத்தில் வெற்றி, மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
10-ம் இடம் கர்ம ஸ்தானம் | தொழில் மாற்றம் அல்லது பதவி உயர்வு, பணிச்சுமை கூடும்.
விருச்சிகம்
|9-ம் இடம்|பாக்கிய ஸ்தானம் அதிர்ஷ்டம் தேடி வரும், தந்தை வழியில் சொத்துக்கள் கிடைக்கும்.
தனுசு
8-ம் இடம் அட்டம ஸ்தானம் மறைமுக லாபம் உண்டாகும், ஆராய்ச்சியில் வெற்றி கிடைக்கும்.
மகரம்
7-ம் இடம் களத்திர ஸ்தானம். திருமண யோகம் கூடும், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
6-ம் இடம் சத்ரு பகை ஸ்தானம் கடன் தொல்லை நீங்கும், எதிரிகளை வெல்லும் வலிமை கிடைக்கும்.
மீனம்
5-ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் புத்திர பாக்கியம், பூர்வீக சொத்துக்களில் லாபம் கிடைக்கும்.
[youtube-feed feed=1]