திருவண்ணாமலை: வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு,  திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்  குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில்,  சிவன் குடியிருக்கும் அண்ணாமலையை பவுர்ணமி அன்று கிரிவலம் செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேற்றும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர் அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் குடிகொண்டிருக்கும், திருவண்ணாமலையை  சுற்றி வருகின்றனர்.  திருவண்ணாமலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 12.50 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.41 மணிக்கு நிறைவடைகிறது.  அதனால், 30-ந்தேதி கிரிவலம் செல்வது சிறப்பானதாகும்.

இந்த முறை,  பவுர்ணமியையொட்டி 30-ந்தேதி வைகாசி விசாகம் வருவதால் அன்றைய தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பவுர்ணமி கிரிவலம் செல்ல வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

[youtube-feed feed=1]