‘நாங்க குடும்ப அரசியல் செய்வோம்!’ : சசிகலா நடராஜன் ஓப்பன் டாக்

Must read

·         அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவின் கணவர், ம.நடராஜன், “நாங்கள் குடும் அரசியல் செய்வோம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
வழக்கம்போல இந்த ஆண்டும், ம.நடராஜன் தஞ்சையில்  பொங்கல் விழா நடத்தினார்.

இதில் நேற்றைய நிறைவு நிகழ்ச்சியில் பேசியநடராஜன் , ‘தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மாற்றும் அவசியம் தற்போது இல்லை. அவர் தலைமையில் சிறப்பான ஆட்சியே நடந்துகொண்டிருக்கிறது.

அதிமுகவை உடைக்க முயற்சி செய்கிறது பா.ஜ.க. தமிழகத்தை காவி மயமாக்கும் மத்திய  பாஜக அரசின் எண்ணம் நிறைவேறாது.

 

மேடையில் நடராஜன். நெடுமாறன், காசி ஆனந்தன்

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் ஜெயலலிதா பாதுகாப்பாக இருந்ததற்கு காரணம் நாங்கள்தான்.

நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம்… மாட்டேன் என்று நாங்கள் சொல்லவில்லை. ‘ என்று நடராஜன் பேசினார்.

More articles

Latest article