தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா…

Must read

சென்னை: தொண்டர்கள் புடைசூழ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் .

அதிமுக பொன்விழா ஆண்டு நாளை (அக்டோபர் 17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளில் தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனால் கட்சி தொண்டர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால்,  தலைவர்கள் நினைவிடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழியான சசிகலா,  4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குப் பின்னர் இன்று ஜெயலலிதா நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனைனை பெங்களூரு சிறையில் கழித்துவிட்டு,  வெளியே வந்த சசிகலா அதிமுகவை கைப்பற்ற முயற்சிகள்  மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து தொண்டர்களையும், அதிமுக அதிருப்தியினரிடமும் பேசி வருகிறார்.

இதற்கிடையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி, உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததால், கட்சியை கைப்பற்ற இதுவே சரியான தருணம் என்று நினைத்து, காய் நகர்த்தி வருகிறார். இதையொட்டி, அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி, தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் சசிகலா கண்ணீர் மல்க இன்று  அஞ்சலி செலுத்தினார்.

சிறைக்கு செல்லும் முன்பு ஜெ.சமாதியில் ஆவேசமாக சபதம் மேற்கொண்ட சசிகலா சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று மீண்டும் ஜெயலிதா சமாதிக்கு வருகை தந்தார். இதையொதட்டி, அவரை வரரவேற்க  ஆதரவாளர்கள் மெரினாவில் குவிந்துள்ளனர்.

இன்று காலை 10.30 மணிக்கு தி.நகர் இல்லத்தில் இருந்து அதிமுக கொடி பொருத்தி காரில்,தனது  ஆதரவாளர்களுடன் நினைவிடம் நோக்கி புறப்பட்ட சசிகலா  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் .ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த உள்ளனர்.

இன்றும், நாளையும் (16 மற்றும் 17) ஆகிய இரண்டு நாட்களில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் அப்பகுதியில் சுமார் 3000 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம்!

More articles

Latest article