இந்தியாவுக்கு பெருமை சேர்த்த திமுக எம்.எல்.ஏ.

Must read

சங்கரன்கோவில்:
ங்கரன்கோவில் திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈ.ராஜா. ஆறடி உயரத்தில் ஆஜானபாகுவான தோற்றத்தில் உள்ள இவர், பளுதூக்கும் வீரரும் ஆவார். எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பாக தமிழகம் மட்டுமின்றி தேசியளவில் பளு தூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளார். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினரான பிறகும் தொடர்ந்து போட்டியில் பங்கேற்று வருகிறார்.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஒரு வாரம் நடைபெறும் ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற ராஜா எம்.எல்.ஏ., 140 கிலோ எடை தூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். இதன் மூலம் திமுகவுக்கும், தமிழகத்திற்கும் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெருமை தேடித்தந்துள்ளார்

துருக்கியில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டி நாளையுடன் நிறைவடைகிறது. இதனிடையே இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்பும் திமுக எம்.எல்.ஏ. ராஜா, தாம் பெற்ற பதக்கத்தை முதலமைச்சரிடம் காட்டி வாழ்த்து பெறுவார் என்று தெரிய வந்துள்ளது.

More articles

Latest article