மும்பை

சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் எனக் கூறி உள்ளார்.

மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அம்மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஓங்கி குரல் கொடுக்கின்றனர். அங்குள்ள பழங்குடி இனத்தவராக உள்ள நாகா, குகி இன மக்கள் தீவிரமாக இதை எதிர்க்கின்றனர்.

கடந்த மே 3 ஆம் தேதி முதல் அவர்களிடையே மோதல் நிலவி வருகிறது.  மணிப்பூர் மாநிலம் முழுவதும் பரவிய கலவரங்களில். சுமார் 120 பேர் பலியாகி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

மணிப்பூர் வன்முறை குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத்,

“மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் கலவரத்தில் சீனாவுக்குப் பங்கு உள்ளது. சீனாவுக்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?. வன்முறைக்குப் பொறுப்பேற்று மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும். மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்”

என்று கூறினார்.