மும்பை

தாம் இனி வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் என்னும் பெயரில் போட்டியிட உள்ளதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலை அக்கட்சித் தலைவர் சரத்பவார் அறிவித்தார். அஜித் பவாருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்பதால் அஜித்பவார் அதிருப்தியில் இருந்து வந்தார். தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் நடந்து வந்தது.

இன்று எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார், தனது ஆதரவு 26 எம் எல் ஏக்களுடன் ஆளும் பாஜக கூட்டணியில் இணைந்தார்.  அவர் தனது ஆதரவு தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன்ஆள்நரை சந்தித்தார்.

ஏற்கனவே 2019 ம் ஆண்டு பா.ஜ.,வின் பட்னாவிசுடன் இணைந்து அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் 8 மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்த அவர், மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்தார்.

இன்று ஆளுநர் மாளிகையில் அஜித் பவார் துணை முதல்வராகவும் தொடர்ந்து அவரது ஆதரவு 8 சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சராகவும் பதவியேற்றனர்.  அஜித் பவாருக்கு 40 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.  தேசியவாத காங்கிரஸ் கட்சியில், மொத்தம் 53 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார்,

”வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடுவோம்-. எங்களுக்கு எங்களை விமர்சிப்பவர்கள் குறித்து கவலை இல்லை, நாங்கள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.  தற்போதைய அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது”

எனத் தெரிவித்துள்ளார்.