லண்டன்: இந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணியே வெல்லும் என பலரும் வியக்கும் வகையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி.

இவர் கடந்த 2012 மற்றும் 2016ம் ஆண்டுகளில், 20-20 உலகக்கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இருந்தவர். இந்த நிலையில்தான் இவ்வாறு கூறியுள்ளார்.

இவர் கூறியுள்ளதை பலரும் ஆச்சர்யத்துடன பார்ப்பதற்கு காரணம், அந்த அணி தற்போது உலக ஒருநாள் தரவரிசையில் 8வது இடத்தில் உள்ளது என்பதுதான்.

ஆனால், “இந்த உலகக்கோப்பை தொடருடன், நமது அணியின் அதிரடி பேட்டிங் மன்னன் கிறிஸ் கெயில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவிக்க உள்ளதால், அவருக்காக நாம் கோப்பை‍யை வெல்ல வேண்டும்” என கூறியுள்ளார் சமி.

மேலும், தனது கணிப்பிற்கு கிறிஸ்தவ புனித நூலான பைபிளிலிருந்து உதாரணத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை, சமீபத்தில் பங்களாதேஷ் அணி அணி புரட்டி எடுத்தது நினைவிருக்கலாம்.