இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி, எதிரணியினருக்கு ‘காத்திருந்து கொல்லும் விஷம்’ போன்று தாக்கத்தை ஏற்படுத்துபவர் என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் உளவியல் பயிற்சியாளர் பாடி உப்டன்.

இவர் கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையின்போது, இந்திய அணியின் உளவியல் பயிற்சியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கூறியுள்ளதாவது, “ஆட்டத்தின் சூழலை கணிக்கும் திறனில், இந்திய அணியின் கேப்டன் கோலி யாருக்கும் சளைத்தவர் அல்ல. ஆட்டத்தின் எந்த நிலையிலும் கட்டுப்பாட்டை கட்டிக்காப்பார்.

எந்தவகை கிரிக்கெட் ஆட்டமாக இருந்தாலும் சரி, அவர் பேட்டிங் இறங்கும்போது என்ன செய்ய வேண்டுமென்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். அவரின் அந்த மனக்கோப்பை இறுதிவரை இழக்கமாட்டார்.

ஒரு ஓவருக்கு 7 ரன்கள் தேவை என்றால், அதை அப்படியே பராமரிப்பார். 1 கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ அடிக்கமாட்டார். பிறருக்கு எளிதில் வாய்ப்பை தந்துவிட மாட்டார். ஆனால், இதில் தோனியின் பாணி வேறு” என்று கூறியுள்ளார்.