மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ: சாய்னா நெவால் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

Must read

Badminton - Yonex All England Open Badminton Championships - Barclaycard Arena, Birmingham - 10/3/16 India's Saina Nehwal in action during the round of 16 Mandatory Credit: Action Images / Andrew Boyers Livepic EDITORIAL USE ONLY. - RTSA7U8

சீனாவின் மக்காவ் நகரில், மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ பேட்மிட்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சாய்னா நோவால் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 17-21, 21-18, 21-12 என்ற செட் கணக்கில் இந்தோனேசியா வீராங்கனை டினார் தியா ஆஸ்டினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் சீனா வீராங்கனை ஜங் இமானைவுடன் மோத உள்ளார் சயனா.

ஆடவர் ஒற்றையர் பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹாங்காங் வீரர் வாங் விங்கை 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார் சாய் பிரணீத் . காலிறுதியில் சீனா வீரர் ஜுன் பெங்கை எதிர்கொள்கிறார் பிரணீத்.

அதேநேரத்தில் காஷ்யப் 13-21, 20-22 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் லின் யூ ஷியெனிடம் தோல்வி கண்டு காலிறுதிக்கு தகுதி பெறாமால் போட்டியை விட்டு வெளியேறுகின்றார். டார். மேலும் ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடிய மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 20-22, 19-21 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் டேனி பாவா-ஹேந்த்ர விஜயா ஜோடியிடம் தோல்வியை தழுவினர்.

More articles

Latest article