
டிசம்பர்-3 மாற்றுதிறனாளிகள் தினம். இத்தினத்தை ஒட்டி மற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த விழாவை, சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, அண்ணா பல்கலைக் கழக மைதானத்தில் இன்று துவங்கி வைக்கின்றார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் டிசம்பர் 3-ம் தேதி வழங்கப்பட உள்ளது.