கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த காவி உடை திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டு வேறு படம் வைக்கப்பட்டு உள்ளது.

கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில்  காவி உடையில் திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது சர்ச்சையானது. இதையடுத்து, அந்த படம் நீக்கப்பட வேண்டும்என்றும்,   தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் படைத்தை மீண்டும் பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,. காவி உடை திருவள்ளுவர் படத்தை அகற்றி,மீண்டும் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர்பதிவிட்டுள்ள டிவிட்டில்,   ”கோவை வேளாண் பல்கலைக்கழக நூலகத்தில் 2017-18 ஆம் ஆண்டு அடிமை அதிமுக அரசின் சார்பில் காவி நிறம் கொண்ட அய்யன் திருவள்ளுவரின் புகைப்படம் வைக்கப்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது. எனது கவனத்திற்கு வந்தவுடன் அதிகாரிகளை அழைத்து பேசி இப்போது அந்த புகைப்படத்தை அகற்றிவிட்டு தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான அய்யன் திருவள்ளுவர் படம் அதே இடத்தில் பொருத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.