சென்னை: பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள  சிவசங்கர் பாபாவுக்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. பத்மா சேஷாத்திரி பள்ளி, மகிரிஷி வித்தியமந்திரி, செயின்ட் ஜார் பள்ளி, அடுத்த கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி என அடுத்தடுத்து தொடர்ந்து வருகிறது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. ஆனால், சிவசங்கர் பாபா தலைமறைவானார். அவர்மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர்,இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டது.  சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதக கூறப்பட்டு. அவரை கைது செய்ய   தமிழ்நாடு சிபிசிஐடி தனிப்படை போலீசார் உத்தரகண்ட் சென்றனர். ஆனால், அவர் அங்கிருந்து டெல்லி சென்றுவிட்டார். இதையடுத்த டெல்லி சென்ற தமிழக காவல்துறையில், டெல்லி காசியாபாத்தில் கைது செய்தனர். பின்னர்  டெல்லி சாகேத் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தி தமிழக்திற்கு அழைத்துச்சென்று அனுமதி பெற்று நள்ளிரவு தமிழகம் அழைத்து வந்தனர்

இதையடுத்து சிபிசிஐடி அலுவலகத்தில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வரும் 19 ஆம் தேதியன்று அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் சிவசங்கர் பாபா மருத்துவ பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சிவசங்கர் பாபா அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாஆஜர்படுத்தப்பட உள்ளார்.