சென்னை: பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு நாளை  (நவம்பர் 16ந்தேதி)  முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

கார்த்திகை மாதம் என்றாலே கனமழை என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது கார்த்திசை மாசம் ஐயப்பன் பக்தர்கள் சீசன் என்ற அளவுக்கு மாறி உள்ளது.  கேரளாவில்உ ள்ள உலகப் புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி இன்று மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் உள்ள அய்யப்ப பக்தர்கள், கோயில்    கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலைக்கு வந்து அய்யப்பன் ஆசி பெறுவது வழக்கம். இதனால் சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் பல ஆயிரம் பேர் சபரிமலைக்கு செல்வார்கள். இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதன்படி,  தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இந்த பேருந்துகள்,  நாளை  முதல் ( 16-ந் தேதி முதல்) அடுத்தாண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளதாகவும்,  சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி/ கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

கார்த்திகை மாதம் திறக்கப்படும் அய்யப்பன் கோவில்,  டிசம்பர் மாதம் 27ந்தேதி (27.12.2023 முதல் 30.12.2023 மாலை 5 மணி வரை) கோயில் நடை சாத்தப்பட உள்ளதால், டிசம்பர் 26 முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகளை www.tnstc.in மற்றும் TNSTC Official App மூலமாக முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி எண்கள்:

மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெறுவதற்கு 9445014452, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய செல்போன் எண்களும் உதவி எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் வசதிகள் மட்டுமின்றி பக்தர்களின் வசதிக்காக வாடகை அடிப்படையிலும் பேருந்துகள் விடப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டாலே தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோயில்களுக்கு செல்லும் நிலையில், மகர விளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜையை காண வழக்கத்தை விட பன்மடங்கு செல்வார்கள். இதை கருத்தில் கொண்டு வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.