ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது போர் தொடுக்கப்படும் என்று இன்று அறிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நிலவி வந்த பதற்றத்தை தணிக்க உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது.

தொலைக்காட்சி வாயிலாக வெளியான இந்த அறிவிப்பு உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தலையீட்டிற்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதப்படுகிறது.

ராணுவத்தை போரில் ஈடுபடுத்த அதிபர் புடினுக்கு முழு சுதந்திரம் அளித்து ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை கலக்கமடையைச் செய்துள்ளது.

உக்ரைன் ராணுவம் தனது ஆயுதங்களை கீழே போடுவது ஒன்று மட்டுமே ரஷ்ய படையின் நோக்கம் என்று அறிவித்துள்ள புடின் இதன் மூலம் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவே கருதப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் மோதல்… மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையால் தவிக்கப்போகும் இந்தியா