சந்திரயான்-3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை குறித்த தகவல்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

23 ம் தேதி மாலை 6:04 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டர் தரையிறங்கும் முன்பு லேண்டரில் இருந்து நிலவை நெருங்குவதை எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை நேற்று வெளியிட்டது.

இந்த நிலையில், லேண்டரில் இருந்து சாய்தள படி வழியாக ரோவர் வெளியேறிய காட்சியை இப்போது வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ வெளியிட்டுள்ள இந்த புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

பிரக்யான் ரோவர் உலவி 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாக பல மாதங்கள் ஆகும் என்றபோதும் இதுகுறித்த புகைப்படங்களை இஸ்ரோ அவ்வப்போது வெளியிடும் என்று ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படுகிறது.