பெங்களூரு: நிலவின் தென்துருவத்தை ஆராய சென்றுள்ள இந்திய விண்கலம் சந்திரயான்-3ன்  பிரக்யான் லேண்டரில் இருந்து விக்ரம் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தரை யிறங்கும் வீடியோவை  இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திராயன்-3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 17ஆம் தேதி தனியாகப் பிரிந்தது. அதைத்தொடர்ந்து லேண்டர்  ஆகஸ்டு 23ந்தேதி (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இஸ்ரோ சார்பில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூன் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்–3 விண்கலத்தில் இருந்து பிரிந்து, விக்ரம் லேண்டர் மாலை 6: 02 மணியளவில் நிலவில் தரை இறங்கியது. இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறி உலக சாதனை படைத்தது. இதையடுத்து சில மணி நேரத்துக்கு பிறகு, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கி தனது ஆராய்ச்சியை தொடங்கி உள்ளது.

இதுதொடர்பான வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான பல்வேறு வீடியோக்கள் இணையதளங்களில் உலவி வரும் நிலையில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, அதுதொடர்பான உண்மை வீடியோவை வெளியிட்டு உள்ளது.

முன்னதாக,  சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரும், பிரக்ஞான் ரோவரும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதை முன்கூட்டியே பரிசோதிக்க இஸ்ரோவுக்கு நிலவில் உள்ளதைப் போன்ற மண் மாதிரி தேவைப்பட்டது. அதற்காக பயன்படுத்தப்பட்டது நம் தமிழ்நாட்டு மண்தான்! இந்தியாவிலேயே அந்த மண் மாதிரி தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே இருக்கிறது. 1950 களில் நாமக்கலில் உள்ள பரமத்திவேலூர் அருகே சித்தம்பூண்டி, குன்னமலை பகுதியில் அனார்தசைட் வகையைச் சேர்ந்த பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2012-13 ஆம் ஆண்டில் சித்தம்பூண்டியில் இருந்து எடுக்கப்பட்ட அனார்தசைட் பாறைகள் சேலத்தில் உள்ள குவாரியில் மண்ணாக மாற்றப்பட்டு, 50 டன் அனார்தசைட் மண் இஸ்ரோவுக்கு அனுப்பப்பட்டது. அந்த மண்ணில் லேண்டர் மற்றும் ரோவரை பரிசோதனை செய்த பின்புதான் சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. தற்போது சந்திராயன்-3 விண்கலத்தையும் அதேபோல நிலவின் மாதிரி மண்ணில் பலமுறை சோதனை செய்து பார்த்த பின்பே விண்ணில் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.