ரொமான்ஸ் என்ற பெயரில் ஈவ்டீசிங்: சினிமாக்காரர்களைத் தாக்கும் மேனகா காட்டம்

Must read

திரைப்படங்களில் ரொமான்ஸ் என்ற பெயரில் பெண்கள் ஈவ்டீசிங் செய்யப்படுவதையே காட்டுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவாவில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசினார். அப்போது, அவர் திரைத்துறையில் பெண்கள் தரக்குறைவாக சித்தரிக்கப்படுவதாக கடுமையாக விமர்சித்தார்.

“சொல்லப்போனால்… கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களிலுமே ரொமான்ஸ் என்ற பெயரில் பெண்களை  ஈவ்டீசிங் செய்கிறார்கள். அப்படித்தான் காட்சி அமைக்கப்படுகிறது.

அதாவது முதலில் அந்த பெண்ணை நாயகனும் அவனது நண்பர்களும் சூழ்ந்துகொண்டு வம்புக்கு இழுப்பார்கள். தொட்டுப் பேசுவார்கள். கடைசியில் ஒரு வழியாக அந்த பெண் காதலிக்க ஆரம்பித்துவிடுவாள். இப்படித்தான் பெரும்பாலான திரைப்படங்கள் இருக்கின்றன.” என்று  விமர்சித்தார்.

மேலும் திரைத்துறையிலும் விளம்பரத்துறையிலும் பெண்களை நல்ல முறையில் காட்டுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

More articles

Latest article