டில்லி,

டந்த மூன்று ஆண்டுகளில் 1 கோடியே 37 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டி ருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை மூலமாக ரூ. 69, 434 கோடியும், சுங்கவரித்துறை மூலமாக ரூ11,405 கோடி யும், கலால் வரித்துறை மூலமாக ரூ13,952யும், சேவை வரித்துறை மூலமாக ரூ 42,727 கோடியும் பிடிபட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரிஏய்ப்பு தொடர்பாக 2 ஆயிரத்து 814 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 2016 பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், பினாமிகளின் பெயரில் நடைபெற்ற 245 பணப்பரிமாற்றமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பணத்திற்கு எதிரான சமரசமற்ற போர் தொடரும் எனவும் மத்திய நிதியமைச்சகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.