கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கா ஏப்.27 மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு ராணுவம் உள்பட போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.

294 தொகுதிகளைக்கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29ஆம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் கட்டமாக 52 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து, 2வது கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் உள்பட அனைத்து பணிகளுடன் பிரசாரமும் முடிவடைந்துள்ளது. கடைசி நாளான நேற்று (ஏப்ரல் 27ந்தேதி) பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இந்த தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 29ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6மணி வரை நடைபெறுகிறது. இந்த இரு கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவுகள் மே 4ந்தேதி எண்ணப்படுகிறது.
இது குறித்து விரிவாக பார்க்கலாம். 2 ஆம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப். 29ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியாளர்கள் வாக்குச்சாவடிகளை நோக்கிப் பயணிக்க தொடங்கியுள்ளனர். இதில், வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி சட்டமன்ற தொகுதியின் தொலைதூர ஆற்று பகுதிகளும் அடங்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்தது.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள 123-சந்தேஷ்காலி சட்டமன்ற தொகுதியின் ஆற்று பகுதிகளை சென்றடைய, அவர்கள் படகுகள் மூலம் ஆறுகளை கடந்து செல்கின்றனர்,” என்று இந்தியத் தேர்தல் ஆணையம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக, மேற்கு வங்கத்தின் தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால், மக்கள் அனைவரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார். “அனைவரும் வாக்களிக்க அனுமதிப்பதே இந்திய தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். உங்கள் அனைவரையும் உங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று உங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். எங்கு வன்முறை சம்பவங்கள் பதிவானாலும், அங்கு நாங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
நாங்கள் அனைத்து சவால்களையும் எதிர்கொள்வோம். உயரமான கட்டிடங்களில் வசிப்போர் குறித்த பட்டியலை நாங்கள் பெற்றுள்ளோம். அவர்களில் பெரும்பாலானோர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த உயரமான கட்டிடங்களுக்குள்ளேயே சில வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 93.19 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது. அதுபோல 2வது கட்ட தேர்தலிலும் வாக்குப்பதிவு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜகவிற்கு இடையே போட்டி நிலவுகிறது.
[youtube-feed feed=1]