ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்வை ரத்து செய்தார் ரஜினி

Must read

வரும்  12ம் தேதி முதல் முதல் 16ம் தேதி  வரை நடைபெறவிருந்த ரசிகர்களுடனான நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரஜினி அறிவிப்பு.

ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள இருப்பதாக ரஜினி அறிவித்திருந்தார். இதையடுத்து தினமும் ஆறு அல்லது ஏழு மாவட்ட ரசிகர்களை சந்திப்பதாகவும், ஒரு மாவட்டத்துக்கு 250 முதல் 300 பேர் வரை சந்திப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது திடீரென சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article