தனிப்பட்ட செல்வாக்கினால் விருது பெறுகிறார்கள்! ஏ.ஆர்.முருகதாஸ் காட்டம்

Must read

டில்லி:

64-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழுவினர் இந்த விருதுக்கான படங்களை தேர்வு செய்து அறிவித்தனர்.

இந்த விருது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தனிப்பட்ட செல்வாக்கு காரணமாகவே விருது கிடைக்கிறது என்று  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட் செய்துள்ளார்.

 

நேற்று வெளியிடப்பட்ட விருதுகள் பட்டியலில்   சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கும்,

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கவிஞர் வைரமுத்துக்கும்,  சூர்யா நடித்த 24 திரைப்படத்திற்கு  சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட சினிமா விருதுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகிறது.

இந்த தேசிய விருதுகள் குறித்து,  பிரபல தமிழ்பட இயக்குனர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது,

இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதில் பாகுபாடு பார்க்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது என்றும், செல்வாக்கு உள்ளவர்களின் படங்களுக்கு மட்டுமே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.

இது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

More articles

Latest article