இடைத்தேர்தல் ரத்து: ஆணைய அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

Must read

டில்லி: பெருமளவில் நூதன வழிகளில் பணப்பட்டுவாடா நடந்ததால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட 29 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்:
* நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் தற்போது இல்லை.

* பணப்பட்டுவாடா நடந்தது வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

* முறைகேடுகளை தடுக்க மேற்கொண்ட முயற்சிகளை தடுத்து நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.

* மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 21ல் தேர்தலை ரத்து செய்ய அதிகாரம் உள்ளது.

* அரசியல் சட்டம் 324வது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.

* இதற்குமுன் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் இதே நிலை ஏற்பட்டிருந்தது.

* விரைவில் தேர்தல் நடத்த உகந்த சூழல் உருவாகும் போது தேர்தல் நடத்தப்படும்.

* பணப்பட்டுவாடா செய்ததில் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு பெரும் பங்கு.

* விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.89 கோடிக்கு ஆவணங்கள் சிக்கின.

* விஜயபாஸ்கரின் நெருக்கமானவர்களின் வீடுகளில் ரூ.5 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்.

எம்.எல்.ஏ., விடுதியில் வார்டு வாரியாக பணம் விநியோகிக்கப்பட்ட பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டது.

* யார் யாருக்கு எவ்வளவு பணம் வழங்க வேண்டும் என்ற பட்டியலும் பறிமுதல் செய்யப்பட்டது.

* பணம் விநியோகிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ரூ.31.91 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

 

* 7 ம் தேதி வரை 18 லட்சத்து 80 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

* வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த மொபைல், டிசர்ட், வெள்ளி தட்டு. புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

* பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் பலர் பிடிபட்டு கைது செய்யப்பட்டனர்.

More articles

Latest article