சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்தால், ஜூலையில் நடக்கவுள்ள சிஏ தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பான ஐசிஏஐ அமைப்பின் சார்பில், தேசிய அளவில், சிஏ தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த தேர்வு, மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டின் மே மாதம் நடக்கவிருந்த தேர்வு, ஜூலைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தேர்வை ஜூலையில் நடத்துவதற்கும் சாதகமான சூழல் இல்லை என்பதால், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பல்வேறு சிஏ பயிற்சி மையங்கள், மாணவர்கள் மற்றும் ஆடிட்டர்கள் சார்பில், இதுகுறித்து ஐசிஏஐ அமைப்பிற்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.