டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மெய்நிகர் பேரணியை 2 கோடி போர் பார்த்ததாக பாஜக கூறுவது கற்பனைக்கு எட்டாதது என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறி உள்ளது.

பாஜகவின் நாடு தழுவிய ‘ஜன சம்வத்’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் இருந்து நடந்த பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். பேரணியானது, மேற்கு வங்கத்தில் நம் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மக்கள் அதை தொலைக்காட்சியில் அல்லது சமூக ஊடகங்களில் பார்த்தனர். எங்கள் அறிக்கைகள் மற்றும் மதிப்பீடுகள் அடிப்படையில் 2 கோடி மக்கள் இதைப் பார்த்திருக்கிறார்கள் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் சயந்தன் பாசு கூறினார்.

டிவியில் பேரணியைப் பார்ப்பதைத் தவிர, ஒரு பெரிய பகுதியினர் இதை பேஸ்புக், யூடியூப் மற்றும் எங்கள் கட்சி வலைத்தளங்களில் பார்த்திருக்கிறார்கள் என்றும் பாசு கூறினார். மாநிலம் முழுவதும் குறைந்தது 15,000 பெரிய எல்.ஈ.டி திரைகள் மற்றும் 70,000 க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் டிவிகள் நிறுவப்பட்டுள்ளன. அதன்மூலம் 2 கோடி மக்கள் பார்த்துள்ளனர் என்று பாஜக தெரிவித்து இருக்கிறது.

மத்திய கொல்கத்தாவில் உள்ள முர்லிதர் சென் லேனில் உள்ள மாநில பாஜக தலைமையகத்தில் நடந்த பேரணியை பல தலைவர்களும், பத்திரிகையாளர்களும் பார்த்தனர். மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், முகுல் ராய் போன்ற மூத்த தலைவர்களுடன் பாசுவும் அதில் கலந்து கொண்டார்.

அதே நேரத்தில் பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது ட்விட்டரில் #BengalRejectsAmitShah என்ற ஹேஷ்டேக்குடன் ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தை நடத்தியது. அமித் ஷாவின் அரசியல் வித்தை வங்கத்தில் எந்த இடத்தையும் எடுபடவில்லை.

பேரணியில் இருந்து அவர் ஆற்றிய உரைக்கு, வங்க மக்கள் ட்விட்டர் உட்பட அனைத்து சமூக ஊடக தளங்களிலும் பாஜக மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக பலமுறை குரல் கொடுத்து வருகின்றனர். பெங்கல் ரெஜெக்ட்ஸ் அமித் ஷா கொல்கத்தாவில் முதலிடத்திலும், நாடு தழுவிய புள்ளிவிவரங்களில் 17 வது இடத்திலும் உள்ளது,

2 கோடி பார்வையாளர்களை கொண்டது என்ற பாஜகவின் கூற்றில் உண்மை இல்லை. சாதாரண பேரணிகளுக்கு மக்களை கூட்டுவதற்கு பாஜகவுக்கு கடினமாக உள்ளது. எனவே அவர்கள் எங்கிருந்து 2 கோடி பார்வையாளர்களை பெறுவார்கள்? ஒவ்வொரு பிரச்சினையிலும் பாஜக பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கூறி உள்ளார்.