பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.,.

Must read

சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்து உள்ளர்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, பிப்ரவரி மாதம் கல்வி நிலையங்கள் திறக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பள்ளிகள் திறப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், இன்று சென்னை திருவல்லிக்கேணியில்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், முதற்கட்டமாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்க  முதலமைச்சருக்கு  பரிந்துரைத்துள்ளத்தாக தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணாக்கர்களுக்கு   ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடத்தப்படும்” என்றார்.

ஏற்கனவே “பொதுத்தேர்வுக்கு முன்பு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில்,  பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்றும் கூறினார்.

 

More articles

Latest article