டெல்லி: நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா, மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், கொரோனா தடுப்புசி தயாரிப்பு நிறுவன அதிகாரியான அதார் பூனம்வல்லா உள்பட 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்தியஅரசு அறிவித்துள்ள 128 பத்ம விருதுகளில் தமிழ்நாட்டில் 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டி அருகே குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், உ.பி முன்னாள் முதல்வர் கல்யாண்சிங், பிரபா அட்ரே, ஸ்ரீ ராதேஷ்யாம் கெம்கா (இலக்கியம் கல்வி) ஆகிய நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சத்ய நா   தெல்லா, சுந்தர் பிச்சை, தடுப்பூசி தயாரிப்பாளர்களான  கிருஷ்ணா எல்லா, சுசித்ரா எல்லா, சைரஸ் பூனவல்லா, புத்ததேப் பட்டாச்சார்ஜி உட்பட 17 பேருக்கு  பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 107 பத்மஸ்ரீ விருதுகள் உட்பட மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருதுக்கு தமிழ்நாட்டில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:

1) சிற்பி பாலசுப்பிரமணியன் – இலக்கியம் 

2) பல்லேஷ் பஜ்ந்திரி- ஆர்ட்டிஸ்ட்

3) எஸ்.தாமோதரன் – சோசியல் சர்வீஸ்

4) சவுகார் ஜானகி – நடிகை

5) ஆர்.முத்துக்கண்ணம்மாள் – ஆர்ட்டிஸ்ட்

6) ஏ.கே.சி.நடராஜன் – ஆர்ட்டிஸ்ட்

7) டாக்டர் வீராசாமி சேஷய்யா – மருத்துவம்

பத்ம விருதுகள் பெறுவோர் முழு பட்டியல்: