மேஷம்

இந்த வாரம் விரும்பிய பொருட்கள் ஒண்ணு ரெண்டு வாங்குவீங்க. சுகமும் சௌகர்யமும் அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். புதுப் புது முயற்சியில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். வியாபாரப் பயணங்கள் மூலம் வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்து விடுவாங்க. உறவு மற்றும் நண்பர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்.. புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமாக ஆதாயம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரியச் செய்திகள் வருவதோடு செலவுகளும் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெறுவர். பெண்களால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். சம்பாதிச்ச பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீங்க. நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும்.

ரிஷபம்

இந்த வாரம் மகிழ்ச்சி மிக்க வாரம். விருந்துகளில் கலந்து கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீங்க. நல்ல யோக பலன்களை எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகளிடம் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த உதவிகள் ஒன்றிரண்டு கிடைப்பதால் நிம்மதியும் சந்தோஷமும் கெடைக்கும். பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். அரசு அதிகாரிகளால் சிலருக்குத் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி திசையை நோக்கிச் செல்லும். விழாக்களில் பங்கேற்றுக் குதூகலமடைவீங்க.

மிதுனம்

இந்த வாரம் இன்பச் சுற்றுலா போன்ற, இனிய பயணங்களால் இன்பத்தில் திளைப்பீங்க. உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீங்க. வீண் செலவுகளை குறைத்து சேமித்து வைப்பது நல்லது. கவர்ச்சிகரமான ஆடம்பரப் பொருட்களை பரிசாக அறிவித்து வியாபாரிகள் ஒங்களோட வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். புதிய, பழைய நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வாங்க. மாணவர்கள் தினசரி ஒங்களோட பாடங்களை அக்கறையுடன் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். இந்த வாரம் வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான பணச் செலவுகள் ஏற்படும் இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும்.

கடகம்

இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். மனையின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீங்க. அரசு பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற மிகுந்த அக்கறையுடன் படித்தல் அவசியம். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீங்க. பிரபலமானவர்களின் அருகாமையால் ஆறுதலும், நட்பால் முன்னேற்றம் கிடைக்கும். புத்தகங்கள்.. நூல்கள் போன்ற தொழில்களில் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : மே மாதம் 12 ம் தேதி முதல் 15 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

சிம்மம்

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். அன்னையின் அன்பு அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. விரும்பிய பொருட்களை வாங்குவீங்க. சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்பட்டுக் கோயில், குளங்களுக்கு தேவையான பணத்தை நன்கொடையாக வழங்கி மகிழ்வீங்க. சிலர் பலவகையிலும் பிறரால் பாராட்டப்பட்டு உயர்வு அடைவர். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
சந்திராஷ்டமம் : மே மாதம் 15 ம் தேதி முதல் 17 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

கன்னி

இந்த வாரம் உங்களுக்கு ஓரளவு பணவரவு இருக்கும். கோபத்தை அடக்கினால் குழப்பங்கள் குறையும். சகோதரர்களிடம் சண்டை புரியாமல் அனுசரித்து போவது நல்லது. சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்கள் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேற்றுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : மே மாதம் 17 ம் தேதி முதல் 19 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

துலாம்

இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். மனைவியின்/ கணவரின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு, அதன் காரணமாக குடும்ப முன்னேற்றம் ஏற்படும். முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீங்க. உயர்ந்த ரக ஆடை ஆபரணங்கள் மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படும்.

விருச்சிகம்:

தெய்வ சிந்தனைகள் மனதில் அமைதி நிலவும். எடுக்கும் முயற்சிகளில் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீங்க. சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும். சிலர், அரசுப் பணிக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று, புதிய பதவிக்கான பணி உத்தரவை பெறுவர். பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரிகள் கெடுபிடி காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு வேறு இடத்திற்கு அல்லது பணிக்கு மாற முற்படுவர். மாணவர்களின் தேர்வு முடிவுகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கேளிக்கை மற்றும் ஆடம்பர செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். தெய்வப் பிரார்த்தனையால், தாமதமான திருமணங்களும் தடபுடலாக நடக்கும். உறவுகளுடன் சென்று மகான்கள் தரிசனம் செய்து மகிழ்வாங்க. அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும்.

தனுசு

தொழில் புரிபவர்களுக்கு அரசு மற்றும் வங்கி மூலம் உதவிகள் கிடைத்து நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பயணத்தின் போது எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். பிறமொழி பேசும் பெண்களின் / ஆண்களின் நட்பினால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் காலத்தை வீணாக்காமல் கருத்துடன் படித்துப் பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பீங்க. மனதுக்கு மிகவும் பிடித்தமான பழைய உறவுகளின் வரவு மனசில் தென்றலென வீசும். மணமேடை ஏறும் மங்கல நாளும் வந்து, மனதில் மகிழ்ச்சி மலர்கள் பூக்கும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புகள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். சிலர் வீட்டில் அள்ளி அணைத்திடவே பிள்ளைச் செல்வம், துள்ளி விளையாடும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம்

சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம் புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைக்கு மாறி வேகம் பிறக்கும். அதன் காரணமாக லாபமும் அதிகரிக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கும். எதிரிகளின் பணமும் வந்து சேரும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் அதிகாரிகள் தயவால் அனுகூலமான பலன்கள் அடைவர். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.

கும்பம்

இந்த வாரம் விருந்துகளில் கலந்துக்கிட்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதை கழிப்பீங்க. சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம் புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து லாபம் அதிகரிக்கும்.உங்களுக்குத் திடீர்ப் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீங்க. அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.

மீனம்

இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். பூஜா வழிபாடுகளால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மதிப்பு மிக்க மனிதர்களின் நட்பால் அரசுப் பணியாளர்களின் ஆசைகள் நிறைவேறும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து லாபம் அதிகரிக்கும்.உங்களுக்குத் திடீர்ப் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீங்க. அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. . சிலருக்கு வீண் அலைச்சல்கள், வெட்டிச் செலவுகளும் தவிர்க்க முடியாததாகும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமையும், உயர்வும் ஏற்படும்.