மேஷம்
குடும்பத்தில் தம்பதிகளின் ஒற்றுமை அதிகமாகும். வேலைக்குப் போற லேடீஸ் சம்பள உயர்வு பெறுவீங்க. பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு  லாபம் கிடைக்கும். கட்டிடம் கட்டிக் குடியேறுவது முதல் கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது வரை நீங்க நினைச்ச செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். வரவேண்டிய பாக்கிங்க வசூலாகும். தர்ம சிந்தனை அதிகரிக்கும். சந்தோஷம் ஒரு பக்கமும் லாபமும் ஒரு பக்கமும் நிலவும். ஸ்மால் டென்ஷன்களும் இருந்தாலும்கூட அதெல்லாம் ஜுஜூபிங்க.  எதையும் சமாளிக்கும்  மனோதிடம் வரும். மென்டலி ஸ்டிராங்கா ஆயிடுவீங்க. சாப்பாட்டு விஷயம் என்பது ஆரோக்ய விஷயம் என்பதை நினைவில் வெச்சுக்குங்க. சுத்தமில்லாத உணவை சுகாதாரமில்லாத இடத்தில் நேரம் கெட்ட நேரத்தில் கண்டபடி சாப்பிடாதீங்க. அளவா.. நேரம் தவறாமல் சுகாதார இடத்தில் சாப்பிட்டால்  ஆரோக்யம் ஷ்யூராப் பிழைச்சுடுங்க.
ரிஷபம்
உங்க டாடிக்கு நன்மை வருங்க.  அதுவும் உங்களால் வரப்போகுது. சந்தோஷமாய் ஹக் செய்து ஆசீர்வதிப்பார். உங்க குழந்தைங்களைப் பற்றி எத்தனைக்கெத்தனை பயந்து நடுங்கினீங்களோ.. அவ்வளவுக்கவ்வளவு பெருமிதப்படுவீங்க பாருங்களேன். குடும்பத்தில் ஒரு நல்ல விஷயமும் நடக்கமாட்டேங்குதே என்று சலித்துப் போயிருந்தீங்க. இனி வரிசையாய்ச் சுப நிகழ்ச்சிகள்தான். தொட்டதெல்லாம் துலங்கும். வாகனம் வாங்கப் போறீங்க. நல்லவங்களை நம்புங்க.. கெட்டவங்களை சந்தேகியுங்க. மத்தவங்க கிட்டே கொஞ்சம்.. இல்ல.. ரொம்பவே கவனமாய்ப் பேசுங்க. எதிர்பாலின நட்பு சந்தோஷம் தரும். நன்மையும் தரும். கணவன் மனைவிக்குள் நல்ல காரணத்துக்காகப் பிரிவு ஏற்படலாம். இட்ஸ் ஓகே. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு மொபைலில் பிரிவுத் துயரம் பேசி முடிக்கறதுக்குள்ளவே சேர்ந்துடுவீங்க. ஹோப் யூ ஆர் ஹாப்பி
மிதுனம் 
எதையுமே செய்து முடிக்க தீவிரமாய் முயற்சி செய்ங்க. அப்பதான் ஓரளவாவது  பலன் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. கார்டை அநாயாசமாய்த் தேய்க்காதீங்க. உத்தியோகத்தில், சக ஊழியர்களின் பணியையும் சேர்த்து செய்யும் நிலை வரலாம். ஹாப்பியா செய்வீங்க. தொழில் செய்யறவங்களுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் பணிகள் ஈஸியாய் நடந்து நிறைவேறும். வாகனம் வாங்கவீங்க. படிப்பில் ஜமாய்ப்பீங்க. கல்யாணம் ஆகுமா என்று ஏங்கிக் காத்திருந்தீங்க. இதோ… ரெடியா.. கடைகடையா ஏறி இறங்கி சேலையும் நகையும் வாங்கவே நேரம் சரியாப் போகும். பிசியாயிடுவீங்க. நண்பர்கள் நல்ல அட்வைஸர்களா இருப்பாங்க. ஆரோக்யத்தைக் கண் மாதிரி கவனிச்சுக்குங்க. ப்ளீஸ். கவர்ச்சி அம்சம் உள்ள உங்களின் குடும்ப வாழ்க்கை அமோகமாக இருக்கும். திடீர்னு இன்கம் அதிகமாகுங்க.
கடகம்
சேமிப்பு இன்கிரீஸ் ஆவுங்க. உங்களோட குடும்பத்தினரின் தேவைங்களை நிறைவேற்றிக் கொடுப்பீங்க. நண்பர்களிடையே இருந்துவந்த சின்னச்சின்ன ஊடல்கள் நீங்கி நேசத்தோடு ஜாலியா ரெஸ்டாரென்ட் போவீங்க. தடைப்பட்டுவந்த சுப நிகழ்ச்சிகள் ஹாப்பியா நடக்கும். பொதுவாகவே சட்டென்று யாரையும் எதிர்த்துப் பேசாமல் இருந்தால் நல்லது. வெற்றிகரமாகத் தொழிலும் சிறக்கும் பணமும் பெருகும். பேச்சில் கவர்ச்சி கூடும்.  பயங்கர இக்கட்டான நிலையையெல்லாம் தாண்டி வந்தாச்சு.. நல்ல நேரத்துக்குள்ள என்டர் செய்துட்டீங்க. கவலை வேணாம். குழந்தைங்க  மேடை மேல ஏறி பெருமிதமாய்ப் பரிசுகள் வாங்குவாங்க. டாடிக்கு வெளிநாட்டு லாபங்களும் வருமானமும் வரும். திடீர்னு உங்களை எல்லாரும் மதிக்க ஆரம்பிப்பாங்க. குறிப்பா எதிர்பாலினத்தினர் உங்களிடம் அதிகம் இழைவாங்க. சற்றே கவனமாயிருங்க. பணம் புரளும். சேமியுங்களேன்.
சிம்மம் 
பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் அல்லது அவங்க குடும்பத்தின் திருமண வைபவங்கள் சூப்பரா நடைபெறும். வழக்குகள் சாதகமாகும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீங்க. படிப்பை முடித்த உங்க பிள்ளைங்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். கூட்டுத் தொழில் புரிவோர் தனித்து இயங்க சந்தர்ப்பம் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், சுயதொழில் செய்வது பற்றி சிந்திப்பாங்க. லவ் என்னும் புதிய கிணற்றில் குதிப்பீங்க. சின்ன சின்ன ஆரோக்யப் பிரச்சினைகள்  டென்ஷன் தரும். நீங்க டென்ஷன் ஆக வேண்டாம். தன்னம்பிக்கை கூடும். கணவருக்கு/ மனைவிக்கு  நிறைய முன்னேற்றம் உண்டு. என்றைக்கோ உழைத்த உழைப்பெல்லாம் இன்றைக்கு வங்கி இருப்பாக உருமாறி உட்காரும். நிறைய அலைச்சல் ஏகப்பட்ட பயணங்கள் இருக்கும். சாப்பாட்டு விஷயத்தில் கேர்ஃபுல்லா இருந்துட்டா பிரச்னை ஏதும் இருக்காது.
கன்னி
நீங்க இந்த வீக் அநாயாச முயற்சிகள் மூலமாகவே தொட்ட காரியங்களில் சக்ஸஸ் கிடைக்கும். உடல்நலம் சீராகி ஹாப்பியா செயல்படுவீங்க. கணவன்- மனைவிக்குள் பாசமும், நேசமும் இன்கிரீஸ் ஆகி வீட்டில் கலகலப்பான சூழல் வந்தாச்சு. பிள்ளைங்களோட மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி ஏற்படும். ஒரு சில காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் எல்லாம் கைகூடிவிடும். பணிபுரியும் பெண்களுக்கு லக்கி வீக் இது. அரசு வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடலாம். தொழில் செழிக்கும். குடும்பத்தில் உங்களைப் புரிஞ்சுக்காம இருந்தவங்கள்ளால் இப்ப வந்து வணங்கி வாழ்த்திக் கட்டிப்புடிச்சு லைக் செய்வாங்க. சிஸ்டர்ஸ் மற்றும் பிரதர்ஸ் கிட்ட நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா பெரிய அளவில் சண்டை சச்சரவெல்லாம் வராமல் இருக்கும் என்பதே பெரிய குட் நியூஸுங்க. சின்னதாய் ஒரு பயணம் உண்டு.
துலாம்
நினைச்சதை நினைச்ச நேரத்தில் செய்து முடிப்பீங்க. விலகிப்போன சொந்தங்கள் விரும்பி வந்து ஜாயின் செய்வாங்க. உங்க வீட்ல சுப விசேஷங்கள் அடுத்தடுத்து நடைபெற சான்ஸ் வரும். உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய முன்னேற்றம் கிடைக்கும். அரசின் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கறவங்களுக்கு நல்ல தகவல் வரும் . சீக்கிரம் பேக் செய்யுங்க. ஃபாரின் சான்ஸ் வரப்போகுதுங்க. கணவருக்கு/ மனைவிக்கு நிஜமாவே நல்ல செய்திகள் மெசேஜிலும்  மெயிலிலும் வரும். அலுவலகத்தில் கொஞ்சமும் எதிர்பார்க்காத உயர்வு ஒன்று இந்த வாரத்தில்… மாதத்தில் கிடைக்கும்.  அதிலெல்லாம் சந்தேகமே இல்லை. பணம் என்பது எந்த விஷயத்திலயும் பெரிய கவலைகொடுக்காது.  டோன்ட் ஒர்ரி. குழந்தைகளுக்காக நிறையக் கவலைப் பட்டீங்க…வேதனைப் பட்டீங்க. எல்லாமும் சரியாகிவிடும். ஹாப்பியா?
சந்திராஷ்டமம் : மே மாதம் 19 முதல் முதல் மே மாதம் 21 வரை
எச்சரிக்கை: சந்திராஷ்ட தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்கவும்  
விருச்சிகம்
செய்யும் முயற்சிகளில் ஓரளவாச்சும் வெற்றி கிடைக்கும். திடீர் திடீரென இன்கம் வந்து ஹாப்பியா ஆக்கும். பிரதர்ஸ் சிஸ்டர்ஸெல்லாம் உறுதுணையாக இருப்பாங்க. கடன்சுமை குறைய புதுசா ஒரு வழிபிறக்கும். கட்டிடப் பணி தொடரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் சுபமான கொண்டாட்டம் உங்களை ஜாலியாக்கும். எதில்தான் குறைச்சல்? என்ஜாய். கல்யாண மண்டம் சமையல்காரர் டெய்லர் என்று சந்தோஷத்துடன் அலையவே நேரம் சரியா இருக்கும். ஆமாங்க ஆமாம், வீட்டில் பல காலமாய்க் காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குறிப்பாய்க் கல்யாணத்திற்குக் காத்திருந்த குடும்ப நபருக்குக் கல்யாணம் ஆகும். அது நீங்களாகவும் இருக்கலாம். மனசில் கருணையும் தெய்வீக எண்ணங்களும் தலைதூக்கும். வெளியூர் வெளிநாடு பயணமெல்லாம் கிளம்ப ஏற்பாடு செய்வீங்க. என்ஜாய்.
சந்திராஷ்டமம் : மே மாதம் 21 முதல் முதல் மே மாதம் 24 வரை
எச்சரிக்கை: சந்திராஷ்ட தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்கவும்  
தனுசு
அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க உங்களுக்கு நன்மை செய்வாங்க. எதிரிகள் பலம் குறையும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீங்க. உத்தியோகத்துல உள்ளவங்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் எளிதில் வந்து சேரும். வீடு, வாகனம் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அதுவும் கைகூடும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீங்க. குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் உண்டு. புதிய உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர், சுயதொழில் தொடங்குவதில் மும்முரம் காட்டுவர். மகன் .. மகள் பற்றி பயம் வேண்டாம்.. அலைச்சல்கள் கடந்த ஒன்றரை வருஷங்களாய் உங்களை ஆட்டிப்படைச்சது போக இப்போது திடீர்னு ஓரிடத்தில் அசையாம இருப்பது நிம்மதி பிளஸ் சந்தோஷம் அளிக்கும்
சந்திராஷ்டமம் : மே மாதம் 24 முதல் முதல் மே மாதம் 26 வரை
எச்சரிக்கை: சந்திராஷ்ட தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்கவும்  
மகரம்
பொதுவாழ்வில் இருக்கறவங்க, இழந்த பதவியை மீண்டும் பெறுவர். உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.  கொஞ்சம் கவனமா இருங்கப்பா. ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் செயல்படுவீங்க. உங்க கருத்துக்களை உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வாங்க. சென்ற வாரத்தில் நடைபெறாத நல்ல விஷயங்கள் இந்த வாரத்தில் துரிதமாக நடைபெறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வரலாம். உங்க குழந்தைங்க வெளிநாடு செல்ல ஏற்பாடுகள் செய்வாங்க. முன்பு இருந்த ஆரோக்யப் பிரச்னை இருக்காது. முன்பு இருந்த கணவன் மனைவி சண்டை இருக்காது. குழந்தைங்க பிரபலமாவாங்க.  வளர்ந்த குழந்தைங்களா? உங்ககிட்ட மனசுவிட்டுப் பேசி உங்களுக்கே அட்வைஸ் செய்வாங்க பாருங்களேன். பேச்சில் மிக கவனமாய் இருந்துட்டீங்கன்னா போதுங்க. பொது பிரச்னைங்கள்ல தலையிட்டுத் தீர்த்து உடனடியா ஃபேமஸ் ஆவீங்க.
கும்பம்
பிரதர்ஸ் மற்றும் சிஸ்டர்ஸ் மூலம் அனுகூலம் கிடைக்கும். பயணங்கள் பலன் தரும் விதம் அமையும். நெருங்கிய ரிலேட்டிவ்ஸ் இடையே இருந்த மனக்கசப்பு மாறும். காரியங்களை கவனத்தோடு செய்து வெற்றி காண முற்படுவீங்க. உத்தியோகத்துல சிலர், சக ஊழியர்களிடையே மனவேறுபாடுகளை அழகா மத்தியஸ்தம் செய்து தீர்ப்பீங்க. தொழிலில், அதிகமான வேலைப்பளு உண்டாகும்.  குறித்த நேரத்தில் பணியை முடிக்க கொஞ்சம் பாடுபட வேண்டியிருக்கலாம். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமங்களைச் சந்திச்சாலும் நல்லபடியா நிறைவேற்றிடுவீங்க. டோன்ட் ஒர்ரி. நிலம் வீடு ஏதாவது கட்டாயம் வாங்குவீங்க. உங்க மகன்  அல்லது மகள் செயல்பாடுகளால் நிம்மதி பிளஸ் சந்தோஷம் பிளஸ் பெருமிதம் உண்டாகும். ஹாப்பியான அலைச்சல் உண்டு. பழைய நட்புகளை மீட் பண்ண சான்ஸ் ஏற்படும்.
மீனம்
நிறைய உழைப்பீங்க. அதுக்கேற்ற பாராட்டு இல்லைன்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்காதீங்க. நேரடியாப் பாராட்டலைன்னாலும் உங்க பெயரை மேலிடம் கவனிச்சு உங்களுக்கான உயர்வைத் தரத்தான் போறாங்க. குடும்பப் பிரச்னைங்களைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லதுங்க. அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படாது. பிகாஸ் அதற்கான பலன் இருக்கும். எதிலும் நிதானம் தேவை. இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். திடீர் பயணத் திட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் விமர்சனங்களப் பற்றி நீங்க எதுக்குக் கவலைப் படறீங்க. இக்னோர் செய்துட்டுப் போயிக்கிட்டே இருங்க.  உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர் அதிக ஆதாயமுள்ள வேலைகளில் சேர முயற்சிப்பாங்க. பொறுப்பை உணர்ந்து செயல்படுங்க. கடமையை சரிவர செய்தாகணும்…தட்டிக் கழிக்கப் பார்க்காதீங்க. குழந்தைங்க ஹாப்பியா ஆக்குவாங்க.