மேஷம்

செலவைக் குறைச்சு சேமிப்பை உயர்த்த முற்படுவீங்க. மனசுக்கினிய நியூஸ்களெல்லாம் வந்து சேரும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழி முறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீங்க. போட்டியாளர்களை காட்டிலும் அரிய சாதனைகள் புரிவீங்க. எதிர்பாலினத்தவங்களோட விவாதம் செய்வதைத் தவிர்க்கணுங்க. வயசு அதிகம் உள்ளவங்களுக்கு, பக்தியில் அதிக நாட்டம் ஏற்படும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாக் கழியும். வாக்கு வன்மையால் பொருட்களின் விற்பனை சூடுபிடிக்கும். இரவு பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருக்கறது நல்லது. மக்கள் சேவையில் ஈடுபட்டு, அதன் காரணமா மத்தவங்களால பாராட்டப்படுவீங்க. குழந்தைங்களோட சீரான முன்னேற்றம் மனசுல சந்தோஷத்தை உண்ணடாக்கும்.

ரிஷபம்

இந்த வாரம் பலவழிகளிலும் வெற்றி மேல் வெற்றி வரும். செல்வ நிலையும் உயரும். கணவன், மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராகும். குழந்தைங்களோட படிப்பு வகையில் செலவுகள் அதிகரிக்கும். பட் அதனால என்னங்க. அதுக்கெல்லாம் நீங்கதான் ஏற்கனவே ரெடியா இருக்கீங்களே… எதிர்கால தொழில் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் இன்வெஸ்ட் செய்துடுங்க. அது ஒங்களுக்கு ஷ்யூரா முன்னேற்றத்தைத் தரும். ஆக்கபூர்வமான அட்வைஸ்கள் அளித்து அன்பு நண்பர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவி செய்து உங்களை ஹாப்பி ஆக்குவாங்க. பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த பெனிஃபிட் ஒண்ணு ஒங்களை வந்தடையுமுங்க.

மிதுனம்

இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சி கொண்டாட்டம், ஆரவாரம்னு வீட்டுல ஹாப்பினஸ் பொங்கும். சுபச் செய்திங்களை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்க திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீங்க. நீங்க எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். கவர்மென்ட் கிட்டேயிருந்து அனுகூலமான நியூஸ்கள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். நல்ல குரு வாய்க்கப்பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்பட சான்ஸ் உள்ளதுங்க. பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். எடுத்துக்கிட்ட புதுத் திட்டங்களில் எதிர்பாராத டிலே அல்லது தடைகள் ஏற்படலாம். இருந்தாலும் சமாளிச்சு நிமிர்ந்து சாதிச்சுடுவீங்க. உழைப்பு அதிகமாகும். ஸோ வாட்? உழைப்புக்கேத்த அளவுக்குப் போதுமான வருமானம் கெடைக்கும். எனவே ஒங்க மனசு நிம்மதியடையுங்க.

கடகம்

மகன் .. மகள் பற்றி பயம் வேண்டாம். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட அவங்க எவ்ளோ சாஃப்ட் ஆயிட்டாங்கன்னு நினைச்சுப் பாருங்க. குழந்தைகள் வயிற்றில் பாதாம்கீர் வார்ப்பாங்க. செலவைக் கட்டுப்படுத்துங்க.. முக்கியமான நல்ல சுப செலவுகள் வந்துக்கிட்டே இருக்கு கியூவில். அதுக்கு ரெடியாகற வழியைப் பாருங்க. நிலம் வீடு ஏதாவது கட்டாயம் வாங்குவீங்க. குழந்தைங்க திடீர்னு புத்திசாலித்தனமா ஆயிடுவாங்க. தர்ம சிந்தனை அதிகரிக்கும். மம்மி உங்களுக்குச் சிறந்த வழிகாட்டி. அதை தயவு செய்து புரிஞ்சுக்குங்களேன். மகன் மகள் டென்ஷன் செய்கிறார்கள் என்று நீங்கள் டென்ஷன் ஆவதில் பயனே இல்லை. மென்மையா டீல் செய்யுங்க. கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும். உயர் அதிகாரிகள் ஆதரவால பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். சிலருக்கு இடமாற்றங்கள், பயணத்தில் மாற்றம் ஆகியவை ஏற்பட சான்ஸ் இருக்கு.

சிம்மம்

சீரான பொருளாதார நிலையால், மனதிற்குப் பிடிச்சபடி மனை, வண்டி வாகனம் என அனைத்தும் கிடைக்கும். குடும்பத்துல உள்ளவங்க அனுசரணையா இருப்பாங்க. குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். சிறு தொழில் புரியறவங்களுக்குத் தேவையான பேங்க் லோன் உதவிங்க கெடைக்கும். தொழில் சிறக்கும். வாழ்க்கைல முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீங்க. எந்த ஒரு காரியத்தையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செயல்பட்டால் உன்னத நிலையை அடையலாம். சிலருக்கு வீண் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கெடைக்கும். சட்டென்று யாரையும் எதிர்த்துப் பேசாமல் இருந்தால் நல்லது. வெற்றி வெற்றி வெற்றி. தொழிலும் சிறக்கும் பணமும் பெருகும். பேச்சில் கவர்ச்சி கூடும். குடும்பத்தில் உங்களைப் புரிஞ்சுக்காம இருந்தவங்கள்ளால் இப்ப வந்து வணங்கி வாழ்த்திக் கட்டிப் புடிச்சு லைக் செய்வாங்க.

கன்னி

குழந்தைங்க கிட்ட கொஞ்சம் அனுசரிக்க வேண்டியிருக்கும். சரியாயிடுவாங்க. வெயிட் பண்ணுங்க. எதை எடுத்தாலும் ஸ்லோவாப் போகுதுன்னு மூக்கால் அழாதீங்க. தாமதமானாலும் மறுக்கப்படாது. உடன் வேலை பார்ப்பவர்கள்.. உடன் படிப்பவர்களிடம் பேச்சில் கவனம்னா கவனம் அவ்ளோ கவனம் செலுத்தணும். உங்க பணிவாலும் செயல் திறமைகளாலும் மேலதிகாரியைக் கவர்ந்திழுப்பீங்க.. அனேகமா அவங்க பெண்.. சகோதர சகோதரிங்க உங்களுக்கு நன்மை செய்வாங்க. மம்மி வெளிநாடு செல்வாங்க. அல்லது ஃபாரின் தேசத்துலேயிருந்து இன்கம் வரும் அவங்களுக்கு. குடும்பத்துல உங்களுடைய நல்ல அனுசரணை காரணமாகக் குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். செல்வாக்கு மிக்க நபர்கள் உதவியால் உங்க பொருளாதார நிலைகள் உயர்ந்து வலுப்பெறும். சிறு தொழில் புரியறவங்களுக்குத் தேவையான வங்கிக் கடன் உதவிங்க கெடைக்கும் தொழில் சிறக்கும்.

துலாம்

டாடிக்கு வெளிநாட்டு லாபங்களும் வருமானமும் வரும். ஒங்களோட அருமை தெரிஞ்சு அரவணைக்கும் நபரால மிகுந்த நன்மை உண்டாகும். சின்ன ஆரோக்கியப் பிரச்னைக்கும் மிகுந்த முக்கியத்துவம் குடுத்து பயந்து நடுங்குவீங்க. கடைசில அது பயப்படும்படியான பிரச்னை இல்லைன்னு தெரிய வந்து சிரிப்பீங்க. ஒங்களோட சிறிய சாதனை ஒன்றுக்காகப் பாராட்டு குவியும். தொழிலில் இத்தனை பெரிய முன்னேற்றத்தை நீங்க பார்த்து ரொம்ப நாளாகுதுதானே? தொழில் செழிக்கும். குடும்பத்தில் சுபமான கொண்டாட்டம் உங்களை ஜாலியாக்கும். எதில்தான் குறைச்சல்? என்ஜாய். உங்க வீட்டுலயோ அல்லது ஒங்களுக்கு வேண்டியவங்க வீட்டுலயோ திருமணம் நிச்சயமாகி… கல்யாண மண்டம், சமையல்காரர், டெக்ஸ்டைல்ஸ், டெய்லர் என்று சந்தோஷத்துடன் அலையவே நேரம் சரியா இருக்கும்.

விருச்சிகம்

ஃபாரின் போகணும்னு ரொம்ப காலமா ஆசைப்பட்டீங்களே. சீக்கிரம் பேக் செய்யுங்க. பாஸ்போர்ட் ரெடியாத்தானே இருக்கு? விசாவுக்கு அப்ளை செய்விங்க. உடனே அதுவும் கெடைச்சுடும். கிளம்புங்க.. கிளம்புங்க. மம்மிக்கு அவங்க பொறந்த வீட்டிலிருந்து சொத்து அல்லது அதில் பங்கு வரும். இந்த வாரம் கையில பணமும் மனசுல சந்தோஷமும் பொங்கி வழியும். எதையும் சாதிக்கும் திறன், நினைச்சதை நெனைச்சபடியே முடிக்கும் முனைப்பும் உங்களுக்கு வாழ்க்கைல நல்ல முன்னேற்றத்தைத் தரும். நல்ல ஃப்ரெண்ட்ஸ் அமைவாங்க. மதிப்பும் மரியாதையும் கூடும். பணியில உள்ளவங்க அக்கறையோட செயல்படுவீங்க. நிறைய்ய்ய்ய்ய உழைப்பீங்க. ஸோ… பதவி உயர்வு ஒங்களைத் தேடி வரும். சம்பளமும் கொங்சம் அதிகமாகும். துன்பம் வரும்போது துவண்டு போயிடாம, தைரியத்துடன் வாழ்க்கைல முன்னேற முயற்சி செய்ங்க. ஷ்யூரா நீங்க ஆசைப்பட்ட கௌரவத்தை அடைவீங்க.

தனுசு

வீட்டுல பல காலமாய்க் காத்திருந்த சுப நிகழ்ச்சி நடக்கும். குறிப்பாய்க் கல்யாணத்திற்குக் காத்திருந்த குடும்ப நபருக்குக் கல்யாணம் நிச்சயமாகும். அது உங்களுக்கேகூட இருக்கலாம். வெளிநாட்டுல உள்ள நண்பர்களால் நன்மை ஏற்படும். பச்சைப் பசேல்னு சூழல் இருக்கும் ஏரியாவில் அழகான..ரொம்ப ரொம்ப அழகான வீடு வாங்குவீங்க. . அல்லது கார் வாங்கப் போறீங்க. நன்மைகளும் லாபங்களும் சுப நிகழ்ச்சிகளும் சந்தோஷமும்னு கலந்து ஒரு மிக்ஸி மாதிரி அலைக்கழிக்கும். அம்மாவுக்குச் சில நன்மைகள் நடக்கும். அதற்காக அவங்க பல காலம் காத்திருந்தாங்க. எனவே அவங்க முகம் மலரும். அதைப் பார்த்து உங்க மனசு மலரும். புதிய முயற்சிகளால பண வருமானம் இன்கிரீஸ் ஆகும். வாடிக்கையாளரிடம் நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். பியூட்டிஃபுல்லான ஆடை ஆபரணங்கள் வாங்குவீங்க. அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீங்க. நீங்கள் எடுக்கும் முயற்சி ஒண்ணு வெற்றி பெறும்.

மகரம்

கணவருக்கு/ மனைவிக்கு நல்ல செய்திகள் மெசேஜிலும் மெயிலிலும் வரும். அதற்காக அவங்க பல காலம் காத்திருந்தாங்க. அதே சமயம் கணவருடன்/ மனைவியுடன் இஷ்டத்துக்கு வாக்குவாதம் செய்ய வேணாங்க. அப்புறம் “அடடா.. இப்டி பேசிட்டேனே” என்று உங்களை நீங்களே குற்றம் சொல்லிக்கிட்டு வருத்தப்படவும் வேண்டாம். உங்க குடும்பத்துல நிச்சயமா, தோரணம், பாயசம், மாலை, மேளம் எல்லாம் உண்டு. டாடிக்கு இத்தனை நாளா இருந்துக்கிட்டிருந்த சின்ன பிராப்ளம் ஒண்ணு ஒரு வழியா முடிவுக்கு வரும். பிகாஸ் அது நீங்க கற்பனை செய்த அளவுக்கு இல்லைங்க. மனசுல இருந்துக்கிட்டிருந்த நல்ல எண்ணங்களும் இரக்க சுபாவமும் வெளிப்படும். அவை உங்க செயலிலும் பிரதிபலிக்கும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து மட்டுமின்றி எதிர்பாராத திக்குகளிலிருந்தும் பண வரவு/ உதவி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : மே மாதம் 26 முதல் மே மாதம் 29 வரை
காஷன் : சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனம் தேவை

கும்பம்

எதை எடுத்தாலுமே தடைகளும் தாமதங்களும் ஏற்படும். ஆனால் முடிவு சுபமாயிருக்கும். அதாவது ஒவ்வொரு சக்ஸஸூம் சின்ன சின்ன பிரச்னைங்களுக்குப் பிறகுதாங்க வரும். வாகனம் வாங்குவீங்க. மாணவர்கள் படிப்பில் ஜமாய்ப்பீங்க. உங்களுக்கு / குடும்பத்தில் யாருக்கேனும் திருமணம் நிச்சயமாகும். கல்யாணம் ஆகுமா என்று ஏங்கிக் காத்திருந்தீங்க. இதோ… ரெடியா.. கடைகடையா ஏறி இறங்கி சேலையும் நகையும் வாங்கவே நேரம் சரியாப் போகும். உங்கள் பேச்சில் இருக்கும் இனிமையும் மென்மையும் உண்மையும் எல்லா இடங்களிலும் பாராட்டு வாங்கித்தரும். சந்தோஷமும் லாபமும் ஒரு பக்கம் நிலவும். பிரச்சினையும் டென்ஷன்களும் இன்னொரு பக்கம் இருக்கும், எதையும் சமாளிக்கும் மனோதிடம் வரும். 30 வயசுக்கு மேற்பட்டவங்கன்னா உழைப்பால் நன்மையும் நிறைய லாபமும் வரும்.

சந்திராஷ்டமம் : மே மாதம் 29 முதல் மே மாதம் 31 வரை
காஷன் : சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனம் தேவை

மீனம்

வியாபாரிங்க புதிய வியாபார நுணுக்கங்கள் புகுத்தி ஆதாயம் காண்பீங்க. அதிகாரிங்ககிட்ட வாக்குவாதம் செய்யாதீங்க. சிலருக்குத் தோல் உபாதைகள் ஏற்படலாம். இட்ஸ் ஓகே… டோன்ட் ஒர்ரி.. கவலைப்படற அளவுக்கு அதிகரிக்காம இந்த வீக் சரியாயிடும். இந்த வாரம் ஒங்களோட நேர்மையும் கடின உழைப்பும் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். நல்ல டிசைன் உள்ள டிரஸ், ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும். நீங்க ஸ்டூடன்ட்டா? வாவ். ஜெயிச்சுட்டீங்க. மாணவர்களே… உங்களுக்குப் படிப்பில் அக்கறை பிளஸ்ஸாகும். அரசாங்கத்திலிருந்து நன்மை கிடைக்கும். பொறுமைக்குப் பலன் உண்டு. கணவரோட/ மனைவியோட கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க. மற்றவர்களிடம் இனிமையாகப் பேசும் நீங்கள் இவங்ககிட்ட மட்டும் ஏன் இப்படி? வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது மனசுக்குள் எடிட் செய்துக்குங்க. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ரொம்பவே ஜாக்கிரதையாப் பேசணும்.

சந்திராஷ்டமம் : மே மாதம் 31 முதல் ஜூன் மாதம் 2 வரை
காஷன் : சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனம் தேவை