மேஷம்

சிறப்பான சக்ஸஸ் எதிர்பார்க்கலாம். சில சின்னச்சின்ன தடைகள் ஏற்பட்டாலும், பல நற்பலன்கள் ஏற்படும். தொழில் விஷயங்களில் நெறைய நன்மைகள் உண்டு. குடும்ப நிர்வாகத்தில் லேடீஸ் ஒத்துழைப்பு நல்ல முறையில அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகளால் பெண்கள் மனம் மகிழ்வீங்க. பங்கு சந்தையில் முன்னேற்றம் உண்டு. சுபமான நல்ல செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும். பழி தரக்கூடிய விஷயங்களைச் செய்யாதீங்க. தொழில் துறையினருக்கு இந்த வாரம் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற வருவாய் வருவதில் கொஞ்சம் தடை.. அல்லது டிலே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறக் கடுமையாக உழைக்க வேண்டும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த எதிர்பாராத சச்சரவுகள் ஒரு வழியா, உங்களின் பொறுமையான அணுகுமுறையால் தவிர்க்கப்படும். நன்மைகள் பெறுவதில் நிதானப்போக்கு இருந்தாலும் நல்ல முறையில் நடைபெறும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 2 முதல் ஜூன் 5 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

ரிஷபம்

ஹாப்பியான சம்பவங்கள் நிறைய நடைபெறும். ஆரோக்கிய பாதிப்புகளில் இருந்து விடுபடுவீங்க. அக்கம் பக்கத்திலும் ஆபீஸ்ல ஒங்ககூட ஒர்க் பண்றவங்க கிட்டேயிருந்தும் ஆதரவு கூடுதலாக் கெடைக்குமுங்க. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீங்க. கணவன்-மனைவிக்கிடையே இருந்துக்கிட்டிருந்த டென்ஷனான சூழல் மாறும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீங்க. திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சூடுபிடிக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். தந்தை வழி உறவினர் மூலம் உங்களுக்கு மிக நல்ல நன்மைகள் நடக்கும், பெரியோர் மற்றும் பெற்றோரின் ஆலோசனை கெடைக்கும். உங்களுக்குக் குடும்பத்தினர் மற்றும் ஃப்ரெண்ட்ஸ் மூலம் பல நன்மைகள் கொடுக்கக்கூடிய சிறந்த வாரமாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். உங்க பிள்ளைங்களால் பிரச்சினை ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை முறையாக நிறைவேற்றுவீங்க. வெரிகுட். நிலையான வருமானம் வர ஆரம்பிக்குமுங்க.

சந்திராஷ்டமம் : ஜூன் 5 முதல் ஜூன் 7 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

மிதுனம்

மனதில் உற்சாகம் பிறக்கும். எடுத்துக்கிட்ட வேலைகளில் மன திருப்தி உண்டாகும். பணவரவு நல்லபடியா இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. சுபகாரிய விசேஷங்கள் நல்ல விதமாய் முடிவாகக் கூடிய வாரம் இது. தொழில் தொடர்பான முதலீடுகள் மற்றும் பேங்க் லோன்ஸ் கன்ஃபர்ம் ஆகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதையும் எதிர்கொண்டு ஜெயிக்கும் பலம் மனசுக்குக் கிடைக்குமுங்க. தொல்லை தந்தவங்க விலகுவாங்க. பணப்புழக்கம் அதிகரிக்கும். தனித்து இயங்கும் ஆற்றல் உருவாகும். தந்தை வழி உறவில் இருந்த சண்டைகளும் சச்சரவுகளும் பிராப்ளம்ஸ்ஸூம் காணாமல் போயிடும்.. தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்குமுங்க. மனக்குழப்பங்கள் அகலும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்படும் திறன் காரணமாக வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 7 முதல் ஜூன் 9 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

கடகம்

உங்க ஃ பேமிலில உள்ளவங்களோட மனசுவிட்டுப் பேசுவீங்க. வீட்டுக்குத் தேவையான சாதனங்கள் வாங்குவீங்க. வேற்று மதத்தரின் உதவி கெடைக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் இப்பொழுது உங்களை சந்திப்பாங்க. வியாபாரத்தை பெருக்குவீங்க. உத்தியோகத்தில் சில வழிமுறைகளைக் கற்றுக் கொள்வீங்க. புதிய தொழில் முயற்சிகள் லாபம் தருவதாக அமையும் பெண்களுக்கு மிகச் சிறந்த வாரமாக அமையும். திட்டமிடாத காரியங்களிலும்சரி.. திட்டமிட்ட விஷயங்கள்லயும் சரி… சாதிக்கக்கூடிய வாரம். பணம் பலவழிகளிலும் வரும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.ரொம்ப வாரங்களா முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் ரொம்ப சிம்ப்பிளாய் ஒங்க மனசுக்குப் பிடிச்ச மாதிரி முடியும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட விசேஷ முடிவாகும். பிசினஸிலும், அலுவலகத்திலும் இருந்துக்கிட்டிருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். தாராளமாகச் செலவிடுவீங்க.

சிம்மம்

ரொம்ப நாளா ஆசைப்பட்ட ஹாப்பியான வாய்ப்பு கைகூடுமளவுக்கு வருமானம் வருமுங்க. பெரிய பொறுப்புகள் மற்றும் பதவிகளிலிருந்து விலகியவர்களுக்கு மீண்டும், அதில் சேரக்கூடிய வாய்ப்பு கைகூடும். திருமணத் தடை அகலும். மம்மியின் உடல் நலம் சீராகும். குடும்பத்துல ஏற்பட்ட குழப்பங்கள் “பை..பை” சொல்லி ஓடியே போயிடும். உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக பேசுவீங்க. செயல்படுவீங்க. திடீர் முடிவுகள் எடுப்பீங்க. பிள்ளைங்களை புதிய பாதையில் வழி நடத்துவீங்க. பெரிய பதவில உள்ளவங்க மற்றும் பிரபலமானவங்களோட ஹெல்ப் கெடைக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாண்டு லாபம் பெறுவீங்க. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீங்க. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீங்க. இட மாற்றம் சம்பந்தமாக முயற்சிகளில் உள்ளவர்கள் அதை வெற்றிகரமாய் முடிச்சு ஹாப்பி ஆவீங்க. இதுவரை ஆபீஸ் வேலையில் இருந்துக்கிட்டிருந்த பிராப்ளம்ஸ் காணாமல் போயி மனசுக்கு முழுமையான நிம்மதி கிடைக்கும்

கன்னி

உங்க எதிர்பார்ப்புகள் நிறைவேற சான்ஸஸ் அதிகரிக்கும். குடும்பத்துல உங்க பேச்சு மதிக்கப்படும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீங்க. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு அதிகரிக்கும். எதிர்பாலினத்துல உள்ளவங்க உதவுவாங்க. வியாபாரத்துல புதியதொரு அறிமுகம் கெடைக்கும். பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைங்க கெடைக்கும். பலநாள் நீங்க கண்ட கனவு ஒண்ணு சட்டென்று நனவாகும். தடைப்பட்ட விஷயங்கள் தானாக சிம்ப்பிளாய் நடைபெற்று ஒங்களை சர்ப்பிரைஸ் பண்ணும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். சண்டைகளும் சஞ்சலங்களும் டாட்டா சொல்லிடும். செய்யும் முயற்சிகளில் அவசரம் காட்டாதீங்க. கொஞ்சம் பொறுமையாவே காலை எடுத்து வைங்க. எதிலும் ஆலோசனை செய்து முடிவெடுப்பதே நல்லதுங்க. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். ஆபீசில் ஒங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பாங்க. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்குவீங்க. மனசுக்கு நிறைவான வாரம் இது.

துலாம்

வியாபாரத்துல நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீங்க. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் முனைப்போட செய்து சக்ஸஸ்ஃபுல்லா முடிப்பீங்க. சிந்தனைத் திறன் அதிகமாகும். குடும்பத்துல உள்ளவங்க ஒங்க ஆலோசனையை ஏத்துக்குவாங்க. ரொம்ப நாட்களாப் போகணும்னு நினைச்சுக்கிட்டிருந்த இடத்திற்குச் சென்று வருவீங்க. வியாபாரத்துல புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீங்க. உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எது செய்வதானாலும் அனுபவம் வாய்ந்தவங்களோட அட்வைஸைக் கேளுங்க. அல்லது உங்க ஜோசியரைக் கலந்தாலோசியுங்க. நல்லவங்களைப் பகைச்சுக்க வேணாங்க. அவங்க வழிகாட்டல் தக்க சமயத்துல கைகுடுக்கும்.. நல்ல சான்ஸஸ் வந்து கதவை தட்டும். அப்போதென்று பார்த்துத் தூங்கிடாதீங்க. ப்ளிஸ். ஆக்கப்பூர்வமான புதிய பிளான்ஸ் உருவாகும். கடினமான செயல்களையும் சுலபமாய் முடிப்பீங்க.

விருச்சிகம்

பழைய வண்டியை எக்ஸேஞ்ச் செய்து மாற்றிட்டு, புதிய வாகனம் வாங்குவீங்க. கணவன் – மனைவி இடையில் இருந்த சின்ன பிராப்ளம் ஒன்று முடிவுக்கு வந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துல மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். ஒங்க குடும்பத்துல பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவாங்க. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்குவீங்க. குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குப் போயிட்டு வருவீங்க. உறவுக்காரங்களோட ஹெல்ப் கெடைக்கும் அதே நேரத்தில் அவங்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். நல்ல ஃப்ரெண்ட்ஸ்க்கு உதவிகளும் நன்மைகளும் செய்து பாராட்டுப் பெறுவீங்க. உத்தியோகத்துல உள்ளவங்களுக்குப் பணிச்சுமை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் மேலதிகாரிங்க கிட்ட நல்ல பெயரை வாங்கி ஹாப்பி ஆயிடுவீங்க. வாகன வகையில் சின்னதாய் ஒரு லாபம் உண்டாகும். ஃபேமிலியில் ஒற்றுமை மேம்படும். மாணவர்களுக்குக் கல்வியில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

தனுசு

சிஸ்டர் பிரதர்களால் உங்களுக்கும் உங்களால் சகோதர சகோதரிகளுக்கும் நன்மை நடப்பதால் நல்ல புரிதல் ஏற்படும். ரிலேடிவ்ஸ் கிட்ட சற்று பக்குவமாக நடந்துக்கறது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத் துணை வழி ரிலேடிவ்ஸ் ஒங்க ஆலோசனைங்களை ஏற்றுக்கொள்வாங்க. அவர்கள் மத்தியில் உங்க கௌரவம் ஒரு படி உயரும்.கொஞ்ச நாளாவே சின்னச் சின்ன இடர்கள் காரணமா முன்னேற்றம் முட்டுக்கட்டை போட்டு நின்னுக்கிட்டிருந்தது இல்லையா? இனி தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்குமுங்க. சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைச்சாலும் இம்பார்ட்டென்ட் செலவுங்க அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அவங்க போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. தாமதப்பட்ட வேலைகள் அனைத்தையும் ஒரேயடியாய் முனைஞ்சு செய்து முடிப்பீங்க. எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சுப விசேஷங்கள் முடிவாகும். வியாபாரத்துல சீரான வளர்ச்சி இருக்கும்.

மகரம்

உத்தியோகத்துல சக ஊழியர்களையோ உயர் அதிகாரிங்களையோ பகைச்சுக்காதீங்க. அலைச்சல் இன்கிரீஸ் ஆனாலும்கூட நீங்க கிரேட்டுங்க. சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீங்க. குடும்பத்தாருடனும் ஃப்ரெண்ட்ஸ் கூடவும் ஹாப்பியா இருப்பீர்கள். அத்தியாவசிய செலவுகள் ஏற்பட்டாலும் அது பற்றிய டென்ஷனோ பயமோ இருக்காது. வீட்டு பராமரிப்பு செலவுகளும் உண்டாகும். ஈஸியா சமாளிக்கும்படியான செலவுங்களாவே இருக்கும். வியாபாரத்துல இயல்பான நிலையே இருக்கும் என்பதால் ரிலாக்ஸ்டா இருப்பீங்க. இனி செய்யவேண்டிய வேலைகளை பற்றிய துல்லியமான பிளான் போடுவீங்க. துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவாங்க. வெற்றி செய்திகள் மொபைல் மூலம் வந்து சேரும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் தொல்லை ஒரு வழியா முடிவுக்கு வரும். திடீர் திடீர்னு சின்னச் சின்னத் திருப்பங்கள் பல வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ஞ்சு மகிழ்வீங்க. அவசரம் பதற்றம் போன்ற குணங்களை விட்டுட்டு இப்போது நிதானமும் பக்குவமுமாய்ச் செயல்படுவீங்க.

கும்பம்

வீடு கட்டுவதில் இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த தடை அகலும். குடும்ப உறுப்பினர்களின் குணமறிந்து நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கை தேவைகள் கடைசி நேரத்துல பூர்த்தியாகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீங்க. தாயார் ஒங்களை ஆதரிச்சுப் பேசுவார். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வெளிநாட்டிலோ, உள்நாட்டிலோ, படித்துக் கொண்டிருக்கும் அல்லது வேலை பார்க்கும் ஒங்களோட வாரிசு முன்னேற்றமான சூழ்நிலையை அடைவாங்க. அவங்க மூலமா ஒரு குட் நியூஸ் அல்லது சுப நியூஸ் வரும். பொருளாதாரத்துல இருந்துக்கிட்டிருந்த சிக்கல்கள் விடுபடுங்க. பிகாஸ் தனவரவு உண்டாகும். ஒங்க ஹஸ்பெண்ட் அல்லது ஒய்ஃபோட முயற்சியால குடும்ப நிலை உயரும். வீட்டுல சுப செலவுகள் ஏற்படும். பிரதர் அல்லது சிஸ்டரின் வார்த்தைங்க பற்றி ஏன் டென்ஷன் ஆறீங்க. விடுங்க. வாகன சேர்க்கை ஏற்படும். யாருடைய வம்புக்கும் போகாதீங்க. குடும்பத்தினர் எதிர்காலம் பற்றிய ஆலோசனை செய்வீங்க. சுயதொழில் தொடங்குவது அல்லது பணத்தைப் பெருக்குவது.. இன்வெஸ்ட் செய்வது பற்றிய சிந்தனை தோன்றும், அது தொடர்பான முயற்சிகளில் இறங்குவீங்க.

மீனம்

கவர்மென்ட் உத்யோகத்தைச் சேர்ந்தவங்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்… அல்லது அரசாங்கத்தால கௌரவிக்கப்படுவீங்க. பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ஸ்டூடன்ட்ஸ்க்குப் படிப்புல ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீங்க. எதிர்பாராத நபர்களின் உதவிகள் கிடைக்கும். எதிர் பார்த்த பணம் வசூலாகும். நீங்க மதிக்கும் அல்லது நிறைய விஷயம் தெரிஞ்சவங்களோட ஆலோசனை பெறுவீங்க. உங்க எண்ணங்கள் பூர்த்தியாகக் கூடிய வாரமாக இருக்கும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடக்கும். கடன், பாக்கிங்க வசூலாகும். போட்டிகள் இருந்தாலும் அதிர்ஷ்ட காற்று உங்களுக்கு சாதகமாகத்தாங்க வீசும். கொஞ்சம் சந்தேகத்துடன் பயந்துக்கிட்டே செய்த முதலீடுகள் நல்ல லாபம் தரும்.