ராமநாதபுரம்:

லங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க மண்டபம் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் இலங்கை புறப்பட்டனர். 53 மீனவர்கள் 7 படகுகளில் இலங்கை  சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வருகின்றனர்.  இலங்கை அரசின் அத்துமீறிய இந்த செயல் காரணமாக தமிழக மீனவர்கள் பெரிரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மத்தியஅரசிடம் பலமுறை முறையிடப்பட்டதும்,  அவ்வப்போது மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர்.  ஆனால் பபடகுகளை விடுக்க மறுத்து இலங்கை வசமே இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் கடந்த மாதம் இலங்கை சென்ற போது நல்லெண்ண அடிப்படையில் 33 விசைப்படகுகள் முதல் கட்டமாக விடுவிக்கப்பட் டன. இதையடுத்து, இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை மீன்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதில், முதல்கட்டமாக ராமேஷ்வரத்தை சேர்ந்த 6 விசைப்படகுகள், மண்டபத்தை சேர்ந்த 1 படகு என 7 படகுகள் மீட்கப்படுகிறது. அவற்றை மீட்டு வருவதற்காக ராமேசுவரத்தில் இருந்து 6 விசைப்படகுகளில் 48 மீனவர்களும், மண்டபத்தில் இருந்து 1 படகில் 5 மீனவர்களுமாக 7 படகுகளில் 53 மீனவர்கள் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை அலுவலகத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டு சென்றனர்.

இவர்களுக்கு பாதுகாப்பாக  சர்வதேச கடல் எல்லை வரை இந்திய கடலோர காவல்படை அழைத்துச் சென்று இலங்கை கடற்படை வசம் ஒப்படைக்கும்.

இதன் பின் இவர்களை இலங்கை காரைநகர் துறைமுகத்திற்கு கடற்படையினர் அழைத்து செல்ல உள்ளனர். அங்கு சென்று படகுகளை மீட்பதற்கான அலுவல்களை முடித்துவிட்டு, 7 படகுகளை மீட்டு வர இருக்கின்றனர்.